Saturday, July 16, 2011

நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்.

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு    நடிகை ரஞ்சிதா நடனம்

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நேற்று பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலை 7.30 மணி முதல் இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இவை அனைத்திலும் சாமியார் நித்யானந்தா கலந்து கொண்டார். அவர் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அவரை பக்தர்கள் பெருமாளை அலங்கரிப்பது போல் அலங்காரம் செய்தனர்.

சில பக்தர்கள் ஆளுயர மாலை அணிவித்து ஆசி பெற்றனர். இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பட்டுப்புடவை அணிந்திருந்தார். அவர் நித்யானந்தா சாமியாருக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

பின்னர் நித்யானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். அப்போது நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்த நடனம் ஆடினார். அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர். சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர். இதை நித்யானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

சில சமயங்களில் பெண்கள் ஆடுவதை கண்டு மனம் விட்டு சிரித்தார். குண்டலினி யோகாசன பயிற்சி பற்றி நித்யானந்தா கூறும்போது, ஒவ்வொரு மனிதனிடமும் குண்டலினி சக்தி உள்ளது. அதை உயிர்ப்பிப்பதற்காக இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார். முன்னதாக பிடரி ஆசிரமத்தில் உள்ள 21 அடி ஆனந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடந்தது.

No comments: