Sunday, July 10, 2011

பாடகி சித்ரா ரெக்கார்டிங் தியேட்டரில் கதறி அழுதார்..பூவே பூச்சூட வா படத்தில் `சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேட்குதா...‘ என்று சின்னவர் முதல் பெரியவர் வரை அனை வரையும் தனது இதமான குரலால் ஈர்த்தவர் பாடகி சித்ரா.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவர் பிறப்பால் மலையாளி.

இருப்பினும் தமிழ் மொழியில் பாடி அசத்தினார். ஏராளமான ரசிகர்களை குயில் குரலால் கட்டிப்போட்டிருந்த அவர் இதுவரை 15 ஆயிரம் பாடல்களைப் பாடி, ஆறு முறை தேசிய விருதுகளையும் தட்டி வந்துள்ளார்.

அவரது அன்பு மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

லட்சக்கணக்கான ரசிகர்களை தனது பாடல்கள் மூலம் லயிக்க வைத்த சித்ராவால் இந்த இழப்பை தாங்க முடியாமல் பாடுவதையே நிறுத்தினார்.

சில மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் வெளியாகும் ஒரு படத்தில் பாட சம்மதித்தார்.

`இஷம் + ஸ்நேகம் = அம்மா‘ என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக்கொண் டார்.

இந்தப் பாடல் ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை சொல்லும் பாடல்... பின் கேட்கவா வேண்டும்... தனது பாசத்தை அந்த பாடலில் பிழிந்து கொடுத்தார்.

சென்னையில் எம்ஜி ஸ்ரீகுமார் இசையில் அந்தப் பாடலை பாடும்போது ரெக்கார்டிங் தியேட்டரில் பீறிட்டு வந்த அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார்... இந்நிகழ்வு ஸ்டுடியோவில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

2 comments:

Rex Arul said...

வயதில் பெரியவராக இருந்தாலும், சித்ரா அம்மாவின் சிரித்த முகமாகட்டும், அருமையான குரல் வளமாகட்டும், அது எல்லாவற்றையும் விட அவரின் மென்மையான, தலைகனமற்ற demeanor ஆகட்டும், அவரை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அப்படிப் பட்ட ஒரு அருமையான பாடகிக்கு, சரித்த முகம் படைத்தவருக்கு, தமது பாடல்களினால் தமிழ் கூறு நல்லுகமெல்லாம் அழ, சிரிக்க, ருசிக்க வைத்த ஒரு அருமையான பாடகிக்கு 15 ஆண்டுகள் கழித்து ஒரு குழந்தை...அதுவும் ஒரு special-needs child....அதுவும் இப்படி ஒரு கோரமான மரணத்தின் மூலமாக இறைவனடி சேர வேண்டிய கொடூரம்...செய்தி வர வர சகல நாடி நரம்பும் ஸ்தம்பித்து விட்டதய்யா. இசைஞானி இளையராஜாவின் இசையில் "அச்சுவிண்டே அம்மா" படத்தில் வரும் "எந்து பரஞ்சாலும்" எந்த அந்த அருமையான மகளைப் பற்றி அவர் பாடியிருக்கும் பாடலைக் கேட்டால், கரையாத மனம் கூட கரைந்து, நொறுங்கி போய்விடும். இதோ அந்த பாடல்: http://www.youtube.com/watch?v=qWoPkd8Fj_M

"இன்னாது அம்ம இவ்வுலகம்" என்று சங்க இலக்கியத்தில் படித்த ஞாபகம் வருகிறது. அது இப்படிப் பட்ட கொடுமைகளை சந்திக்கும் போது, நினைவுக்கு வந்து தொலைகிறது.

May the soul of the tiny flower be in eternal peace. Requiescant in pacem.

Rex Arul said...

Here is a better quality video of the song from "Achuvinte Amma" by KS Chitra (Music: Maestro Ilaiyaraaja):

http://www.youtube.com/watch?v=rPkg-2-FIHI&feature=related