Sunday, June 12, 2011

இந்தியாவுக்கு வரும், வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்டுகள்.


இந்தியா, வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்கள் இந்திய அரசிடம் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்ததைக் கொடுக்க முன்வந்துள்ளது மத்திய அரசு. வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்கள் இந்தியாவில் சில்லரை வியாபாரம் செய்ய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Wal-Mart Stores , Carrefour , Tesco, Metro AG ஆகிய வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்கள், இந்தியாவில் சில்லரை வியாபாரத்தில் ஈடுபட விண்ணப்பித்திருந்தன. ஆனால், இந்தியாவின் சில்லரை வர்த்தகச் சட்டம் அதற்கு இதுவரை இடம் கொடுக்கவில்லை.

தற்போது சட்டம் மாற்றப்படவுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சில்லரை வர்த்தகம் ஒன்றில் 51% முதலீட்டைச் செய்யலாம் என்பதே புதிய சட்ட மாற்றம். நிதி அமைச்சின் பிரதான பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு, இதற்கான பரிந்துரையை அங்கீகரித்துள்ளார்.

அடுத்துவரும் சில மாதங்களில், வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்களால் 450 பில்லியன் டாலர் முதலீடு இந்தியாவில் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்தியாவின் பிரதான நகரங்களில், வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்கள் தமது கதவுகளைத் திறக்கப் போகின்றன!

No comments: