Sunday, June 12, 2011

பெனாசிர் கொலை வழக்கு : முஷரபுக்கு நிரந்தர கைது வாரண்ட் ; பாகிஸ்தான் கோர்ட்டு பிறப்பித்தது.

பெனாசிர் கொலை வழக்கு:    முஷரபுக்கு நிரந்தர கைது வாரண்ட்;    பாகிஸ்தான் கோர்ட்டு பிறப்பித்தது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய போது தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது முஷரப் அதிபராக இருந்தார். அவரது ஆட்சியின் போது பொனாசிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தவறியதால் தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் முஷரப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டில் இவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது லண்டனில் தங்கியுள்ளார் எனவே, இவர் விசாரணைக்காக பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டில் ஆஜராக வில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வில்லை. எனவே அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் அறிவிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது அவர் மீது ஜாமீனில் வெளி வர முடியாத நிரந்தர கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ராணா நிசார் அகமது அதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார். இதற்கிடையே, முஷரப் பின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தர விடவேண்டும் என அரசு வக்கீல்கள், கோரிக்கை விடுத்தனர்.

அதை தொடர்ந்து அடுத்த வழக்கு விசாரணையின் போது சொத்து விவரத்தை அளிக்குமாறு நீதிபதி கூறினார். இந்த வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

No comments: