Saturday, June 25, 2011

ஜூலை 13 மற்றும் 14-ந்தேதி கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் .

13 மற்றும் 14-ந்தேதி கால்நடை மருத்துவ    படிப்பு கவுன்சிலிங்

கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 13 மற்றும் 14-ந் தேதி நடக்கிறது. இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) இளநிலை மீனவளம் (பி.எப்.எஸ்.சி.) பி.டெக் (உணவு பதனிடுதல் தொழில் நுட்பம்) மற்றும் பி.டெக் (கோழியின் உற்பத்தி தொழில் நுட்பம்-பி.டெக்-பிபிடி) ஆகிய பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடக்கிறது.

ஜூலை 13-ந்தேதி காலை 9 மணிக்கு பி.வி.எஸ்.சி. மற்றும் எ.எச்., ஜூலை 14-ந்தேதி பி.எப்.எஸ். சி. (கலையியல் பிரிவு மற்றும் தொழில் பிரிவு) பி.டெக் (உணவு பதனிடுதல் தொழில் நுட்பம்), பி.டெக் மற்றும் அனைத்து படிப்புகளுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டிற்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது.

மாணவர்களின் தரப்பட்டியல் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பத்தாரர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் குறிப்பிட்டுள்ள கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று உரிய காலத்தில் விண்ணப்பத்தை சமர்பிக்க தகுதியுள்ள மாணவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

தரப்பட்டியலை www.tanuvas.ac.in. என்ற இணைய தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை தேர்வுக்குழுத்தலைவரும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான டாக்டர் எஸ். திலகர் தெரிவித்துள்ளார்.

No comments: