மதுரையில் உள்ள மலையாளிகளுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது தமிழுணர்வாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அரசே இந்நிறுவனங்களை மூட உத்தரவிட வேண்டும் என்று மதுரை வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் சகாயத்திடம் கோரினர்.
மதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராமசாமி தலைமையில் 200 வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சகாயத்திடம் நேரில் வந்து, கேரள மாநிலத்தவர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்களை உடனடியாக மூட உத்தரவிடக்கோரியும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக் கோரியும், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை முடியும் வரை இது அமலில் இருக்கும்படி செய்யுமாறூம் கேட்டுக் கொண்டனர்.
இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு நடவடிக்கை எடுப்பேன். எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது. தக்க நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் சகாயம்.
கேரள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் : மதுரை பதற்றம்
மதுரையில் உள்ள மலையாளிகளுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது தமிழுணர்வாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அரசே இந்நிறுவனங்களை மூட உத்தரவிட கோரியுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த 24 மணிநேரங்களுக்குள், மதுரையில் செயல்பட்டு வரும் கேரள நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த நிறுவனங்களுக்கு பார்வார்ட் பிளாக் (தினகரன் பிரிவு ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதன்காரணமாக, அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.
மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆவேசம் : மலையாளிகள் அலறல்.
மதுரையில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் மலையாள நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் கிளைகள் உள்ளன.
இன்று மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள், மலையாளிகளுக்கு பதிலடி கொடுக்கும் ஆவேசத்தில் முத்தூட் நிறுவன கிளைகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
அப்போது அங்கு பணிபுரிந்த மலையாளிகள் அத்துனை பேரும் அய்யோ, அம்மா என்று அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
No comments:
Post a Comment