Saturday, September 17, 2011

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பெண்கள் மறியல் - சென்னையில் 66 பேர் கைது .

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் பெண்கள் மறியல்- 66 பேர் கைது

மத்திய அரசு நேற்று இரவு பெட்ரோல் விலையை உயர்த்தியது. இதைக் கண்டித்து சென்னையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். வியாசர்பாடியில் அம்பேத் கர் கல்லூரி அருகே எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திடீரென்று ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர் கார்த்தி கேயன், உதவி கமிஷனர் கோவி.மனோகரன், இன்ஸ் பெக்டர்கள் செந்தில் குமார், சிவசங்கரன் ஆகியோர் விரைந்து சென்று பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை போலீசார் வேனில் ஏற்றி கொடுங்கையூர் திருமண மண்டபத்தில் வைத் திருந்தனர். வியாசர்பாடி பி.வி.காலனி யில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதை கண்டித்து பெண்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டனர்.

உதவி கமிஷனர் கோவி.மனோகரன், மின்வாரிய உதவி பொறியாளர் சித்ரா ஆகியோர் சென்று பெண்களுடன் பேசி சமரசப்படுத்தினார்கள்.

No comments: