அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்த நிலை இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர்.
இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். அது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸ்சிசிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஷோனா போன்றவையும் அடங்கும்.
No comments:
Post a Comment