Wednesday, October 5, 2011

வாழ்வு முத்திரை, ஜீரண முத்திரை, இதய முத்திரை, லிங்க சக்தி முத்திரை .

வாழ்வு முத்திரை.
வாழ்வு முத்திரை

சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.


ஜீரண முத்திரை.
ஜீரண முத்திரை

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும்.

சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.


இதய முத்திரை.
இதய முத்திரை

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டை விரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது.

இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.


லிங்க சக்தி முத்திரை.
லிங்க சக்தி முத்திரை

இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும்.

எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.

இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!

தொகுத்தவர்: முனைவர் ஆர்.ராஜன், சென்னை.

4 comments:

VIJAYAKUMAR.R said...

மிக அருமையான பதிவிற்கு என் நன்றிகள்.
எனினும் எனது சில சந்தேகத்திற்கு விடை கூறும் படி வேண்டுகிறேன் .
இந்த முத்திரைகளை நடந்து செல்லும் போது பயன் படுத்தலாமா
ஏதாவது ஒரு கையில் முத்திரை செய்யலாமா அல்லது இரண்டு கைகளிலும் செய்ய வேண்டுமா

வை.அருள்மொழி said...

முத்திரைகளை இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். நடந்துகொண்டு முத்திரை பயிற்சி செய்யக்கூடாது.

janarthanan said...

ஏதாவது ஒரு கையில் முத்திரை செய்யலாமா அல்லது இரண்டு கைகளிலும் செய்ய வேண்டுமா.
i am a heart patient. can i do this muthirai? i am 30 years old.

janarthanan said...

nan siru vayathil heart operation seidullen. ippodu intha muthiraiyai seyyalama