தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.பி.பி. சரண் மது விருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாண்டிபஜார் போலீசில் நடிகை சோனா புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.பி. சரண் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து ஐகோர்ட்டில் சரண் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பணம் பறிக்கும் நோக்கில் சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சோனா எதிர்த்தார்.
இந்த நிலையில் சோனா இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
பின்னர் சோனா நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். இன்று கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன். வீடியோ ஆதாரத்தை எனது லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்து இருந்தேன். அதனை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன்.
நான் பணத்துக்கு ஆசைப்பட்டும் விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு சோனா கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- எஸ்.பி.பி. சரணிடம் நீங்கள்தான் பாலியல் உணர்வை தூண்டியதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளதே?
பதில்:- யார் குற்றவாளி என்பது என் வீடியோ ஆதாரத்தில் தெளிவாக உள்ளது. அந்த வீடியோவே இந்த கேள்விக்கு பதில் சொல்லும்.
கே:- இயக்குனர் வெங்கட் பிரபு உங்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டாரா?
ப:- இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண் தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை. சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் நான் விடமாட்டேன்.
கே:- வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா?
ப:- அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. நாளை பார்ப்போம்.
இவ்வாறு சோனா கூறினார்.
No comments:
Post a Comment