Monday, March 21, 2011

அதிமுக தேமுதிகவிற்கு ஒதுக்கிய தொகுதிகள், மேலும் 4 தொகுதிகள் கேட்கும் விஜயகாந்த்.


தேமுதிகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகுதிகள்.


விருத்தாசலம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், திருச்செங்கோடு, ஆரணி, செங்கம் தனி, பட்டுக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, சோளிங்கர், தருமபுரி, கங்கவல்லி தனி, மதுரை மத்தி, கூடலூர் தனி, திருவாடானை, திட்டக்குடி தனி, குன்னம், மயிலாடுதுறை, திருவெறும்பூர், சேலம் வடக்கு,. ராதாபுரம், சூலுர், விருகம்பாக்கம், ஓசூர், லால்குடி, பேராவூரணி, செங்கல்பட்டு, எழும்பூர் தனி, செஞ்சி, ஈரோடு கிழக்கு, கம்பம், சேந்தமங்கலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், ஆத்தூர், பண்ருட்டி, அணைக்கட்டு, பத்மநாபபுரம், வேப்பனஹள்ளி, மேட்டூர், ஆலந்தூர்.

இந்தப் பட்டியலால் 7 மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருப்பதால் விஜயகாந்த்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை இந்நிலையில் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறிவிட்டதால் அதிமுக வசம் கூடுதலாக உள்ள தொகுதிகளில் 4 இடங்களை தங்களுக்குத் தர வேண்டும் என்று விஜய்காந்த் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம், அதிமுக கூட்டணியை விட்டுவிட்டு தனித்துப் போகும் அளவுக்கு தற்போது விஜயகாந்த்தின் நிலை இல்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. அந்த அளவுக்கு அதிமுகவிடம் அவர் 'வேறு விஷயங்களில்' வசமாக 'சிக்கி'யுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

No comments: