மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் ஏறத்தாழ 300 சிறுமிகளை சிறுவர்களாக மாற்றும் முயற்சியில் அவர்களது பெற்றோர்களே இறங்கியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.
இதற்காக மேற்கொள்ளப்படும் ஜெனிட்டோபிளாஸ்டி என்ற சிகிச்சையின்படி, ஆண் ஹார்மோன்கள் பெண்களின் உடலினுள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் தங்களது பெண்கள், ஆண்களாக மாறி விடுவர் என நம்புகின்றனர்.
இந்த சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் வரை செலவிடுகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து இன்னும் 15 நாட்களில் தகவல் அளிக்குமாறு தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி மருத்துவர் வி.பி. கோஸ்வாமி கூறும்போது, இது போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது அந்த குழந்தைகளின் உடல் மற்றும் மன நலத்தை பார்க்க வேண்டும் எனவும், இதனால் அவர்கள் மலட்டு தன்மையை அடையும் அபாயம் மற்றும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதனை சமூகத்தில் நடைபெறும் முட்டாள்தனம் என்றும் சாடியுள்ளார்.
No comments:
Post a Comment