Friday, July 1, 2011

சென்னையில் இருந்து மதுரை, திருவனந்தபுரத்திற்கு ஏ.சி. சொகுசு ரெயில் : இடையில் நிற்காமல் செல்லும்.


சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை, திருவனந்தபுரத்திற்கு தூரந்தோ ரெயில் புதிதாக விடப்படுகிறது.

தெற்கு ரெயில்வே கால அட்டவணையில் இரண்டு தூரந்தோ ஏ.சி. ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு செல்லும் இந்த குளு குளு வசதி ரெயில் வழியில் எங்கும் நிற்காது.

வாரத்திற்கு இரண்டு நாள் இந்த ரெயில் சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக சென்றடையும். திங்கள், மற்றும் புதன்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வரும்.

இதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வாரம் இருமுறை செல்லக்கூடிய தூரந்தோ எக்ஸ்பிரஸ் இடையில் எங்கும் நிற்காது. செவ்வாய், மற்றும் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து புறப்படும். புதன் மற்றும் சனிக்கிழமை மறு மார்க்கத்தில் இருந்து புறப்படும். இந்த 2 புதிய ரெயில் அறிமுகப்படுத்தபடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


68 ரெயில்
கள் வேகம் அதிகரிப்பு : திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தினமும் இயக்கப்படும் ; பொது மேலாளர் அறிவிப்பு.

தெற்கு ரெயில்வே கால அட்டவணையை வெளியிட்ட பொதுமேலாளர் தீபக் கிருஷ்ணன் பின்னர் நிருபர்களிடம கூறியதாவது:-

தெற்கு ரெயில்வே மூலம் ஒரு நாளைக்கு 220 ரெயில்களை 266 முறை இயக்கப்படுகின்றன. மின்சார ரெயில்கள் 700 முறை இயக்கப்படுகிறது. கடந்த 2009-10-ம் ஆண்டில் 69 கோடி மக்கள் ரெயிலில் பயணம் செய்தனர். 2010-11-ம் ஆண்டில் இது 73 கோடியே 75 லட்சமாக உயர்ந்தது.

2009-10-ம் ஆண்டு வருவாய் ரூ.2463 கோடியாகும். 2010-2011-ம் ஆண்டு ரூ.2049 கோடியாக குறைந்தது. கடந்த ஆண்டு 2230 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் 1651 ஆக தற்போது குறைக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட பல ரெயில்கள் நிரந்தரமாக்கப்பட்டதே இந்த குறைவுக்கு காரணமாகும்.

41 ரெயில்களின் வேகம் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை வேகம் அதிகரிக்கப் பட்டுள்ளது. 27 ரெயில்களின் வேகம் 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை அதிகரிக்கப் பட்டுள்ளது. பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்டிகள் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கான பெட்டி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெட்டிகள் அதிகரிக்கப்பட்டவுடன் தினசரி விடப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


சென்னை எழும்பூர் வழியாக புதுச்சேரி-டெல்லிக்கு சூப்பர் பாஸ்ட் புதிய ரெயில்; வாரந்தோறும் இயக்கப்படும்


புதுச்சேரி - புதுடெல்லிக்கு புதிய ரெயில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமை தோறும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
காலை 9.05-க்கு புறப்பட்டு எழும்பூருக்கு பகல் 1 மணிக்கு வருகிறது. பின்னர் பகல் 1.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு டெல்லி சென்றடைகிறது.
டெல்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறது. பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு ஞாயிற்றுக் கிழமை இரவு 11.50 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் அதிவேக ரெயிலாக இயக்கப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து 6-ந்தேதி முதல் இந்த புதிய ரெயில் புறப்பட்டு செல்கிறது.


கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 2 மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் (எண்.40107) செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.

இதேபோல மாலை 4.50 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயிலும் (40007) செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.

இதேபோல செங்கல்பட்டில் இருந்து காலை 8.35 மணிக்கும், மாலை 6.55 மணிக்கும் கடற்கரைக்கு புறப்படும். காலை 10.23 மணிக்கும், இரவு 8.35 மணிக்கும் அந்த ரெயில்கள் கடற்கரையை வந்தடையும்.

இதேபோல ஆவடி- சென்னை கடற்கரை (பிற்பகல் 1, 2.40 மணி), சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி (மாலை 3.45), கும்மிடிப்பூண்டி-சென்ட்ரல் (மாலை 5.30 மணி), சென்ட்ரல்- திருவள்ளூர் (மாலை 6.50 மணி), திருவள்ளூர்-சென்ட்ரல் (இரவு 8.45) ஆகிய வழித்தடங்களில் கூடுதலாக மின்சார ரெயில் சர்வீஸ் இயக்கப்படுகிறது.

No comments: