Friday, July 1, 2011

கொல்கத்தா மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் .

கொல்கத்தா மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்

கொல்கத்தாவில் உள்ள பி.சி.ராய் மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் இன்று மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், பி.சி ராய் மருத்துவமனை கண்காணிப்பாளர், டி.பால் கூறுகையில் இறந்த குழந்தைகள் செப்டிகேமியா மற்றும் குறைந்த எடை ஆகிய பிரச்சினைகள் பாதிக்கப்பட்டு இருந்தனர் என தெரிவித்தார்.

கொல்கத்தா மருத்துவமனையில் 17 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில் இந்த குழந்தைகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தில்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார் .

மேற்கு வங்கத்தில் சுகாதாரத் துறையையும் மம்தா பானர்ஜியே கவனித்து வருகிறார். முன்னதாக செப்டம்பர் 2002-ல் நிமோனியா, இரைப்பை-குடல் பிரச்னை காரணமாக 2 மாதக் குழந்தை உள்ளிட்ட 14 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

No comments: