கறுப்புப் பணம் மற்றும் ஊழலை உடனே ஒழித்துவிடும் மேஜிக் எதுவும் தன்னிடம் இல்லை என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
நேற்று டெல்லியில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங்,கறுப்புப் பண விவகாரம் மற்றும் ஊழல் ஒழிப்பு குறித்து விரிவாகப் பேசினார்.
அவர் கூறுகையில், "நாட்டில் கறுப்புப் பணம் மற்றும் ஊழல் பிரச்சினை இருப்பது உண்மைதான்.
ஆனால் ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே இந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ளன. இவற்றின் பொருளாதாரத்தில் 25 சதவீதம் அளவுக்கு கறுப்புப் பணம் பிரதான பங்கு வகிக்கிறது.
கறுப்புப் பணம், ஊழல் இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவைதான். அதற்கான வேலையில் இறங்கியுள்ளோம். ஆனால் நினைத்த மாத்திரத்தில் இந்தப் பிரச்சினைகளை தீர்த்துவிடும் மேஜிக் எதுவும் என்னிடமில்லை. கடினமான இந்த சமூகப் பிரச்சினைக்கு படிப்படியாகத்தான் தீர்வு காணவேண்டும்.
கறுப்புப் பண விவகாரத்தில், அந்நிய நாடுகளுடன் மிகவும் போராடி தகவல்களைப் பெற்று வருகிறோம். இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை. பல்வேறு சட்டச் சிக்கல்கள் கொண்டது. எனவே கொஞ்சம் அவகாசம் பிடிக்கும்," என்றார்.
No comments:
Post a Comment