டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை உயர்த்துவதற்காக மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தை கூட்டுமாறு நீண்ட காலமாகவே பெட்ரோலியத் துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில், மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தை இன்று மத்திய அரசு கூட்டியது .
இதையடுத்து டீசல் லிட்டருக்கு விலை ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது இன்று 24-06-2011 நள்ளிரவு முதல் அமல் ஆகிறது, மேலும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு விலை ரூ.50ம், மண்எண்ணெய் லிட்டருக்கு விலை ரூ.2ம் மத்திய அரசு விலை உயர்த்தி உள்ளது.
காங்கிரஸ் அரசு பத்தாவது முறையாக இந்த விலை ஏற்றத்தினைச் செய்துள்ளது. இன்னும் எத்தனை முறை விலை ஏறுமோ?
எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன என்பதும் தவறான செய்தியாகும்.
இந்தியாவின் பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு 2010 - 11ம் நிதியாண்டில் வரி போக கிடைத்த நிகரலாபம் :
IOC க்கு 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.5294 கோடி,
HPCL 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.2142.22 கோடி,
BPCL 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.2148 கோடி,
இதன் மூலம் அரசுக்கு கிடைத்து வரி ரூ.2340.22 கோடி ஆகும்.
ஆக 2010 - 11ல் அரசுக்கும் எண்ணெய் நிறுவணங்களுக்கும் கிடைத்த நிகர இலாபம் ரூ.11,924.44 கோடி ஆகும்.
பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்ன? அரசின் மோசடி - ஒரு விரிவான அலசல். http://vaiarulmozhi.blogspot.com/2011/06/blog-post_3331.html
No comments:
Post a Comment