நெல்லை அருகே கங்கைகொண்டானில் மான் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான மான்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மான்கள் பூங்காவில் இருந்து வெளியேறாமல் இருக்க வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஏதாவது ஒரு பகுதியில் சேதமடைந்திருக்கும் வேலிகள் வழியாக மான்கள் பூங்காவில் இருந்து வெளியேறி வந்து விடுகின்றன.
பூங்காவானது 4 வழிச்சாலை பகுதியில் உள்ளதால் வெளியேறும் மான்கள் அந்த வழியாக வரும் வாகனங்களில் அடிபட்டு பலியாகின்றன. வாகன ஓட்டிகள் மான்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விடுகின்றனர். நேற்று கயத்தாறு பகுதியில் ஒரு மான் வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மானை மீட்டு சிகிச்சையளித்தனர்.
இன்று காலை நெல்லை அபிஷேகப்பட்டியில் மான் ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்தது. இதற்கு முன்பாகவும் மான்கள் வாகனத்தில் அடிபட்டு இறந்துள்ளன. தொடர்ச்சியாக மான்கள் வாகனங்களில் அடிபட்டு பலியாகி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment