தே.மு.தி.க. மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் இன்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருப்பவர் பேபியம்மாள். இவருக்கு கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சொந்தமாக காப்ளக்ஸ் உள்ளது. இதில் 20 கடைகள் வரை செயல்பட்டு வருகிறது. இந்த காம்பளக்சில் தி.மு.க.வை சேர்ந்த சரவணன் என்ற நபரும் கடை வாட கைக்கு எடுத்தார். ஆனால் அவர் இதுவரை வாடகையும் தரவில்லை. கடையை காலியும் செய்யவில்லை. இதுப்பற்றி தேவியம்மாள் போய் கேட்டால் கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.
இதையடுத்து கடந்த 16-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் வந்து பேபியம்மாளை கடையை காலி செய்ய சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியது. இதனால் பயந்து போன தேவியம்மாள் ஓமலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 147, 148, 294 (பி) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 18-ந் தேதி நள்ளிரவில் மீண்டும் பேபியம்மாள் வீட்டிற்கு வந்த ஒரு கும்பல் வீட்டை அடித்து நொறுக்கினர். மோட்டார் சைக்கிளையும் உடைத்தனர். இதுகுறித்து மீண்டும் ஓமலூர் போலீசில் புகார் செய்ததற்கு அவர்கள்147, 148, 506, 2 என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே அந்த சம்பவத்துக்கு பின்னர் சரவணன் அவரது கடைக்கு முன்பு பொருட்களை வைத்து மற்ற கடைக்கு யாரும் செல்லாதவாறு தடை ஏற்படுத்தி இருந்தார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் காம்பளக்ஸ் உரிமையாளர் என்ற முறையில் பேபியம் மாள் போய் கேட்டுள்ளார். அப்போது பெண் என்றும் பாராமல் ஒரு கும்பல் அவரை கடுமையாக தாக்கியுள்ளது. மேலும் பன் வெட்டும் கத்தியால் பேபியம்மாளை வெட்டினர். இதில் மயங்கி விழுந்த அவரின் ஜாக்கெட்டை கிழித்து கொடுமை படுத்தினர். மேலும் அப்போது எட்டியும் உதைத்தனர். தாக்கப்பட்ட பின்பு பேபியம்மாள் மீண்டும் ஓமலூர் போலீசில் புகார் கொடுக்க சென்றார். அப்போது போலீசார் அவர் கொடுத்ததை புகாரில் எழுதாமல் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் பேச்சுவார்த்தை நடத்தி சரவணனுடன் சுமூகமாக சென்று விடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். பின்னர் பேபியம்மாள் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நேரத்தில் நான் மேட்டூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இருந்தேன். அப்போது பேபியம்மாளின் மகள் எனக்கு போன் செய்து நடந்த விவரத்தை கூறி அழுதார். நான் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெற்று வந்த பேபியம்மாளை பார்த்து ஆறுதல் கூறினேன்.
தொடர்ந்து ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றேன். அங்கு எப்.ஐ.ஆர். போட்டு விட்டீர்களா? என்று கேட் டேன். அதற்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் என்பவர் என்னிடம் போட்டுக் கொண்டே இருக்கிறோம் என்று பதிலளித்தார். உடனே நான் போலீஸ் சூப்பிரண்டை தொடர்பு கொண்டு எப்.ஐ.ஆர். போடும் வரை நான் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்றேன்.
இதையடுத்து எஸ்.பி. விரைந்து வந்தார். அப் போது எங்கள் கட்சி தொண் டர்களும் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் எப்.ஐ.ஆர். போட்டார்கள். காலை 11 மணிக்கு நடந்த சம்பவத்துக்கு இரவு 11 மணிக்கு தான் எப்.ஐ.ஆர். போட்டார்கள். அதன்பின்பு நான் அங் கிருந்து வந்து விட்டேன். ஆனால் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் சிலர் நான் மன்னிப்பு கேட்டதாக கூறு கிறார்கள். நான் மன் னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தால் சட்டரீதியாக எதிர்கொள்வேன். நான் நடந்த விவரங்களை கட்சி தலைமையிடம் கூறினேன். கட்சி தலைவர் விஜயகாந்த் பாதிக்கப்பட்ட பேபியம்மாளுக்கு ஆறுதல் கூறினார்.
நான் போலீஸ் நிலையத்திற்கு சென்ற போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் குடிபோதையில் இருந்தார். இதுப்பற்றி நான் போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி னேன். ஓமலூர் போலீஸ் நிலையத்தில் ஒருதலை பட்சமாகவே நடந்து கொள் கிறார்கள். போலீசார் கட்டப்பஞ்சாயத்து பேசி வருகிறார்கள். ஓமலூர் போலீசார் இன்னமும் பழைய ஆதரவு நிலையிலேயே உள்ளனர்.நான் போலீஸ் நிலையத்திற்கு சென்றது நீதி கேட்டு தான். என்னை யாரும் சிறைபிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment