Friday, June 24, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் : 3-வது குற்றப்பத்திரிகை 7-ந்தேதி தாக்கல்; சி.பி.ஐ. ஆதாரங்களை திரட்டுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: 3-வது குற்றப்பத்திரிகை 7-ந்தேதி தாக்கல்;  சி.பி.ஐ. ஆதாரங்களை திரட்டுகிறது

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீட்டில், முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கைத்துறை அறிவித்தது. இந்த முறைகேடுகளுக்கு யார்-யார்? காரணம் என்று சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, பாராளுமன்ற பொது கணக்கு குழு மற்றும் கூட்டுக்குழு ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஏராளமான ஆதாரங்கள் சிக்கின. அதன் மூலம் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதை சி.பி.ஐ. உறுதி செய்தது.

இந்த இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, சுவான் டெலிகாமின் ஷாகித் பல்வா ஆகிய 4 பேர் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகை சுமார் 80 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக தயாரிக்கப்பட்டிருந்தது. 654ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ரிலையன்ஸ், யுனிடெக், சுவான் டெலிகாம் ஆகிய 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த வினோம் கோயங்கா (டி.பி.ரியாலிட்டி) சஞ்சய் சந்திரா (யுனிடெக் வயர்லஸ்), அரிநாயர், கவுதம் ஜோஷி, சுரேந்திர பிபாரா (மூவரும் ரிலையன்ஸ்) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. 125 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பண பரிமாற்றங்கள் எப்படி மேற்கொள்ளப்பட்டன என்பது தெரிய வந்தது.

பண பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி இரண்டாவதுகுற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் அதை துணை குற்றப்பத்திரிகை என்கிறார்கள். அதில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், சுவான் டெலிகாமை சேர்ந்த ஆசீப் பல்வா, குசேகான், பழம்-காய்கறி நிறுவன இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கரீம் மொராலி ஆகிய 5 பேர் பெயர் இடம் பெற்றிருந்தது.

இவர்கள் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் சதிக்கு துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் சம்பாதிக்கப்பட்ட பணம் வெளிநாடுகளில் உள்ள வங்கிகள், தனியார் அமைப்புகள் மூலம் ஹவாலா மோசடி அடிப்படையில் பெறப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கலைஞர் தொலைக்காட்சிக்கும் இப்படித்தான் பணம் கை மாறி உள்ளதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறி உள்ளது. எனவே தான் கனிமொழி மீது ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7 மற்றும் 11 ஆகியவை கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பண பரிமாற்றத்துக்கான ஆதாரங்களை சி.பி.ஐ. அதிரடி வேட்டை நடத்தி சேகரித்துள்ளது.

மொரிசியஸ், இங்கிலாந்து உள்பட பல வெளிநாடுகளுக்கு குழுக்களை அனுப்பி பண பரிமாற்ற ஆவணங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் பல முக்கிய ஆவணங்கள் அடுத்த வாரம் வெளிநாடுகளில் இருந்து வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 3-வது குற்றப்பத்திரிகையை வரும் 7-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆவணங்களில் 80 சதவீதம் தயாராக உள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் மேலும் சிலரது பெயர் இடம் பெறும் என்று தெரிகிறது. அதோடு சில தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களிடம் நடந்த விசாரணை விபரங்களும் தெரிய வரும். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தகுந்த ஆதாரங்களுடன், இந்த குற்றப்பத்திரிகையில் அம்பலப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இந்திய மாலுமிகள் டெல்லி திரும்பினார்கள்: பாகிஸ்தான் உதவிக்கு இந்தியா நன்றி.

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இந்திய மாலுமிகள் டெல்லி திரும்பினார்கள்: பாகிஸ்தான் உதவிக்கு இந்தியா நன்றி

எகிப்து நாட்டுக்கு சொந்தமான எம்.வி. சூயஸ் என்ற சரக்கு கப்பல், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, சோமாலியா கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அதில் இருந்த 6 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 22 மாலுமிகளும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடல் கொள்ளையர்கள் கேட்ட பணயத் தொகையை தர, கப்பல் உரிமையாளர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாலுமிகள் 22 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானின் பி.என்.எஸ். சுல்பிகர் கப்பல் மூலம், நேற்று கராச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி சோகைல் இஜாஸ்கான் தலைமையில் அங்கு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்திய மாலுமிகள் 6 பேரும், டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று காலையில் அவர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களை, அதிகாரிகளும், மாலுமிகளின் குடும்பத்தினரும் வரவேற்றனர். மாலுமிகள் குடும்பத்தினர், அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். 10 மாதங்கள் கடல் கொள்ளையர் பிடியில் இருந்ததால், மாலுமிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது.

மாலுமிகளை பத்திரமாக மீட்க உதவி புரிந்ததற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில், இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளை மீட்டுக்கொண்டு வர தகுந்த நேரத்தில் பாகிஸ்தான் உதவி செய்தது. இதற்காக அந்நாட்டுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியீடு - திருச்சி மாணவி திவ்யா முதலிடம், 18 பேர் 200-க்கு 200 எடுத்து சாதனை.


பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது.

திருச்சி மாணவி திவ்யா முதலிடத்தையும்,

ராசிபுரம் மாணவர் யோக பரசுகன் 2வது இடத்தையும்,


சென்னை மாணவர் சுரேஷ் பால்ராஜ் 3வது இடத்தையும் பெற்றனர்.


பிஇ, பிடெக் படிப்புகளில் சேருவதற்காக மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 355 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இவற்றில் சரிவர நிரப்பப்படாத 5246 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 1 லட்சத்து 43 ஆயிரத்து 109 பேருக்கு தரவரிசை இன்று வெளியிடப்பட்டது.

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பொது “கவுன்சிலிங்” சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

ஒரே மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான “ரேண்டம்” எண் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட்டது. இன்று தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார். ரேங்க் பட்டியல் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது.

பின்னர் அமைச்சர் பழனியப்பன், ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 “கட்-ஆப்” மார்க் எடுத்த மாணவ- மாணவிகளின் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேருவதற்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், 3,492 பேர் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.

விண்ணப்பித்தவர்களில் “கட்-ஆப்” மார்க் அடிப்படையில் திருச்சி திருவெறும்பூர் பிரகாஷ் நகர் மாணவி திவ்யா முதல் இடம் பிடித்துள்ளார். ராசிபுரம் யோகபரசுகன் 2-வது இடம் பிடித்திருக்கிறார். பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த சுரேஷ்பால்ராஜ் 3-வது இடம் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ஒதுக்கீட்டில் இவருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

சின்னசேலம் ஹரிநிவாஸ் 4-வது இடமும்,
ஈரோடு பவானி அகிலா 5-வது இடமும்,
நாமக்கல் ஜீவிதா 6-வது இடமும்,
அரூர் விக்னேஷ் 7-வது இடமும்,
சென்னை மடிப்பாக்கம் மகாலெட்சுமி 8-வது இடமும்,
சிவகாசி ஆகாஷ் 9-வது இடமும்,
நாமக்கல் அபிநயா 10-வது இடமும்,
கோவை கள்ளப்பாளையம் கவுதம் பிரகாஷ் 11-வது இடமும்,
பெருந்துறை சபீதா 12-வது இடமும்,
நாமக்கல் அருண்பிரசாத் 13-வது இடமும்,
சிவகங்கை கல்லல் சிதம்பரம் 14-வது இடமும்,
கோவை கே.கே.புதூர் அர்ச்சனா 15-வது இடமும்,
மோகனூர் பூவிழி 16-வது இடமும், பெற்றுள்ளனர்.

இதுதவிர ஈரோடு விக்னேஷ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முதல் இடமும், ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் 29-வது இடமும் பிடித்திருக்கிறார்.

ஈரோடு ஷானாபீர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் முதல் இடமும் ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் 44-வது இடத்தை யும் பிடித்துள்ளார்.

மொத்தம் 18 பேர் 200-க்கு 200 “கட்-ஆப்” மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட பிரிவில் பெரம்பலூர் செல்வபிரபாத் 199.75 “கட்-ஆப்” மதிப்பெண்கள் பெற்று அந்த பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவில் திருச்செங்கோடு நவீனா 199.50 எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

பழங்குடியினர் பிரிவில் நாமக்கல் கொல்லிமலை வேலவன் 197.75 “கட்-ஆப்” மார்க் வாங்கி அந்த பிரிவில் முதல் இடத்துக்கு வந்திருக்கிறார்.

பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் `சூயிங்கம்` உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்; அத்வானி வற்புறுத்தல்..



மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் உளவு பார்க்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான சர்ச்சை, பெரிதாகின்றது. பாரதீய ஜனதாக் கட்சி இதை இப்போது கையில் எடுத்துள்ளது.

நம்பமுடியாத, சிரிப்புக்கிடமான கதைகளைக் கூறி, மக்களை முட்டாள்களாக்க முயன்றால், அதை மக்கள் இலகுவில் புரிந்து கொள்வார்கள்.” என்றும் கூறியிருக்கிறது அந்தக் கட்சி.

இவர்கள் குறிப்பிடுவது, நிதியமைச்சரின் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தது சூயிங்கம் என்ற கதையைப் பற்றித்தான்!

மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அலுவலகம் உளவு பார்க்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் உளவு பார்த்து இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். வெளிநாட்டில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், இதை செய்திருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள். எப்படி இருப்பினும், இது மிகவும் சீரியசான விஷயம். அதனால்தான், இதுபற்றி ரகசிய விசாரணை நடத்துமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதி உள்ளார். இதன்மூலம் அவர் இதை சீரியசாக கருதுவது தெரிகிறது.

இதை சாதாரண விஷயமாக கருதி இருந்தால், பிரதமரிடம் அவர் புகார் தெரிவித்திருக்க மாட்டார். இந்த விவகாரத்தை விசாரணை செய்த அதிகாரிகள், பிரணாப் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த பசை போன்ற பொருளை `சூயிங்கம்` என்று கூறுகிறார்கள். சூயிங்கத்தை விழுங்க முடியாது என்பதால், அதை யாரோ ஆங்காங்கே ஒட்டி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

பிரணாப் முகர்ஜி, மிகவும் புத்திசாலி. அவர் இதை நம்பக்கூடாது. ஒரு குழந்தை சூயிங்கம் சாப்பிட்டால், அதை ஒன்றிரண்டு இடங்களில் ஒட்டி வைக்கும். 16 இடங்களிலா ஒட்டி வைக்கும்? புத்திசாலியான பிரணாப் முகர்ஜி, நாட்டு மக்களும் புத்திசாலிகள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும்.

இந்த வெட்கக்கேடான விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய முழு உண்மைகளையும் பிரதமர் மன்மோகன்சிங் தெளிவுபடுத்த வேண்டும். இப்பிரச்சினையை பா.ஜனதா கூட்டணி, வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பும்.

இவ்வாறு அத்வானி கூறினார்.

கலைஞர் டி.விக்கு பணம் : இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்-விஜய் மல்லையாவிடம் விசாரிக்க சிபிஐ முடிவு.



கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு பணம் கொடுத்தது ஏன் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் மல்லையாவிடம் விளக்கம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

டிபி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி தந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கலைஞர் டி.வியின் பங்குதாரரும், திமுக எம்பியுமான கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

டிபி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு தந்த பணத்தை, வட்டியுடன் திருப்பித் தந்துவிட்டது கலைஞர் டிவி. ஆனால், அவ்வாறு அந்தப் பணத்தைத் திருப்பித் தர இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் விஜய் மல்லையாவும் உதவியதாக இப்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், யு.பி. குரூப் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணத்தை கலைஞர் டிவி செலவு செய்துவிட்ட நிலையில், அந்தப் பணத்தை திருப்பித் தர இந்தியா சிமெண்ட்ஸ், யுபி குரூப் நிறுவனம் ஆகியவை கலைஞர் டி.விக்கு பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவரான சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராகவும் உள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், சிபிஐ எங்களிடம் விளக்கம் கேட்கவுள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றார்.

யுபி நிறுவனத்தின் துணைத் தலைவரான பிரகாஷ் மிர்பூரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் டிவிக்கு விளம்பரம் தந்த வகையில்தான் யுபி குரூப் நிறுவனம் பணம் கொடுத்துள்ளது. இதுதவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கும் எங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இல்லை. இது தொடர்பாக சிபிஐ எங்களிடம் தொடர்பு கொண்டால், விளக்கம் தருவோம் என்று கூறியுள்ளார்.

இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்.

இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர்களும், மலையாளிகளும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஈழத்தில் தமிழின அழிப்புக்கான திட்டங்களைத் தீட்டி, சோனியாவின் தலைமையின் கீழ், ரகசியமாக அமுல்படுத்தியது, மலையாள அதிகாரிகள் குழுதான். பார்ப்பனர்களைப் போலவே மலையாளிகளும் எப்போதும் தமிழினத்தைப் பகையாகக் கருதுவோரே! எனவேதான் சோனியா, மலையாளிகளிடம் இந்தப் படுகொலைத் திட்டத்தை ஒப்படைத்தார்.

மத்திய அரசினை சூழ்ந்து நிற்கும் மலையாள அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கம் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

இதோ, இந்தப் பட்டியலைப் பாருங்கள்:


என். பெர்னான்டஸ் (ஜனாதிபதியின் செயலாளர்)

வி.கே. தாஸ் (ஜனாதிபதியின் தனிச் செயலாளர்)


டி.கே.ஏ. நாயர் (பிரதமரின் முதன்மைச் செயலாளர்)


என்.நாராயணன் (பிரதமரின் பிரதான ஆலோசகர்)


பி. ஸ்ரீதரன் (நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்)


கே.எம். சந்திரசேகர் (அமைச்சரவைச் செயலாளர்)


ருத்ர கங்காதரன் (விவசாயத்துறைச் செயலாளர்)

மாதவன் நம்பியார் (விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்)

நிருபமா மேனன் ராவ் (வெளியுறவுத்துறைச் செயலாளர்)


சத்திய நாராயணன் தாஸ் (கனரகத் தொழில்துறை செயலாளர்)

ஜி.கே. பிள்ளை (உள்துறைச் செயலாளர்)

சுந்தரேசன் (பெட்ரோலியத் துறைச் செயலாளர்)

கே. மோகன்தாஸ் (கப்பல் துறைச் செயலாளர்)

பி.ஜே. தாமஸ் (மத்திய கண் காணிப்பு ஆணையத்தின் தலைவர்)

சிவசங்கர மேனன் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்)

சுதா பிள்ளை (திட்டக் கமிஷன் செயலாளர்)

வி.கே. சங்கம்மா (வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்)

ஆர். கோபாலன் (நிதிப் பணிகள் துறை இயக்குநர்)


கே.பி.வி. நாயகர் (செலவீனங்கள் துறைச் செயலாளர்)

கே. ஜோஸ் சிரியாக் (வருவாய்த் துறைச் செயலாளர்)

ஆர். தாமஸ் (வருமான வரித்துறைச் செயலாளர்)


வி. ஸ்ரீதர் (சுங்கத் துறைச் செயலாளர்)

பி.கே.தாஸ் (அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்)


ஏ.சி. ஜோஸ் (கதர் வாரியம்)

சி.வி. வேணுகோபால் (பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்)

ஸ்ரீகுமார் (இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்)

கோபாலகிருஷ்ணன். (பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தபடியாக செயல்படும் மூத்த அதிகாரி இவரும் கேரளாவை சேர்ந்தவர்)


கே.எம். சந்திரசேகர் (அமைச்சரவை செயலாளர்)


சி.கே. பிள்ளை (உள்துறைச் செயலாளர்)

நந்தகுமார் (கூட்டுறவுத் துறைச் செயலாளர்)

பி.கே.தாமஸ் (தகவல் தொழில் நுட்பத் துறைச் செயலர்)


ரகுமேனன் (செய்தி ஒலிபரப்புத் துறை செயலர்)

ராமச்சந்திரன் (நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர்)

ரீட்டா மேனன் (ஜவுளித் துறைச் செயலாளர்)

கங்காதரன் (கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்)


சாந்தா ஷீலா நாயர் (குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்)

விசுவநாதன் (சட்டத் துறை செயலாளர்)

மாதவன் நாயகர் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்).

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால் இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி

வெளிவிவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி

விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி.தாமஸ்

உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

ரயில்வே துறை இணையமைச்சர் அகமது.

வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்த சசிதரூரையும் (பதவி விலகியவர்) சேர்த்தால் ஆறு பேர்.

சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான்.

சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங்குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லோருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.

அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் கேந்திரமான நிர்வாகப் பகுதிகளை கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள்.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர் வேறு மாநிலங்களில் பணியாற்றி மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது!


விடுதலை இராசேந்திரன்.

லோக்பால் சட்டத்துக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர் கொள்ளத் தயார் : அன்னா ஹசாரே.

லோக்பால் சட்டத்துக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர் கொள்ள தயார்: அன்னா ஹசாரே

கடுமையான விதிகளுடன் கூடிய லோக்பால் சட்டத்துக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக அன்னா ஹசாரே உறுதிபட தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள அவருடைய சொந்த கிராமத்துக்கு செல்லும் வழியில் புனே நகரில் அவர் பேட்டியளித்தார். அப்போது, ஹசாரே கூறுகையில், சாவைக் கண்டு அன்னா ஹசாரே பயப்படவில்லை. எங்கள் போராட்டத்தை நசுக்குவதற்காக தடியடி மட்டுமல்ல துப்பாக்கிக் குண்டுகளையும் பயன்படுத்தட்டும். அதை நாங்கள் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஆனால், இந்தியாவில் ஜனநாயக ஆட்சி தேவையா? சர்வாதிகார ஆட்சி தேவையா? என மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.