Thursday, March 24, 2011

63 தொகுதிகளிலும் காங்கிரஸை வீழ்த்துவதுதான் லட்சியம்! - சீமான்


காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, அந்தக் கட்சியை தமிழ்நாட்டில் இல்லாதொழிப்பது மட்டுமே நாம் தமிழர் கட்சியின் இப்போதைய நிலைப்பாடு என சீமான் அறிவித்துள்ளார்.

தமிழ் ஈழ தீவிர ஆதரவாளரான வைகோ அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார். அப்படியெனில் அவரால் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட மற்றொரு ஈழ ஆதரவாளரான நாம் தமிழர் கட்சி சீமானின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

வைகோ - அதிமுக உறவு முறிவுக்குப் பிறகு பலர் மனதிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு கடந்த ஒரு வார காலமாக பதிலே இல்லை. தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கையாகத் தந்து கொண்டிருந்த சீமானும், திடீரென அமைதியாகிவிட்டார்.

இந்தத் தேர்தலில் அவர் தனித்துப் போட்டியிடுவார் என்று நேற்று இரவு கூறப்பட்டது. இவை அனைத்தும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு கூடிய நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை, இந்தத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவதை மட்டும் பிரதானமாகக் கொள்வோம் என முடிவெடுத்தது. அதன்படி, தேர்தலில் போட்டியிடாமல், காங்கிரஸை எதிர்த்து நிற்கும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு பிரச்சாரம் மேற்கொள்வோம் என திடீரென முடிவு செய்து, அதனை இன்று காலை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட இன்று காலை 11 மணிக்கு பத்திரிகையாளர்களை சென்னை பிரஸ் கிளப்பில் சந்தித்தார் இயக்குநர் சீமான்.

அவர் கூறுகையில், " இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி நேரடியாகப் போட்டியிடுவதில்லை என்று இப்போது முடிவு செய்துள்ளோம். காரணம், நாங்கள் தனியாக நிற்பதால் பெரும் வாக்குகள் திமுக அணியில் உள்ள காங்கிரஸுக்கு சாதகமாகப் போய்விடும் ஆபத்துள்ளது.

தனிப் பெரும் சக்தியாக காங்கிரஸை வீழ்த்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். எனவே, காங்கிரஸை எதிர்த்துக் களம் காணும் எதிர் அணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில், எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை நேற்று எடுத்துள்ள முடிவு இது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, எங்களுக்கு இரட்டை இலை, முரசு, கதிர், சுத்தியல் அரிவாள் போன்ற சின்னம் முக்கியமல்ல. காங்கிரஸை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணமே முக்கியம்.

ஈழத் தமிழர்களைக் கொன்றழித்த கட்சி காங்கிரஸ். தமிழக மீனவர்கள் படுகொலையை வேடிக்கைப் பார்க்கும் கட்சி காங்கிரஸ். தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த கட்சி காங்கிரஸ். காவிரித்தண்ணீருக்கும், முல்லைப் பெரியாறு தண்ணீருக்கும் தமிழனை கையேந்த வைத்த கட்சி காங்கிரஸ்.

எனவே அந்தக் கட்சியே தமிழகத்தில் இனி இருக்கக் கூடாது. இனி வரும் தேர்தல்களில் எந்த திராவிட கட்சியும் காங்கிரஸுடன் கூட்டு வைத்துக் கொள்ளவும் கூடாது. அப்படி ஒரு நிலை உருவாகத்தான் இந்தத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.

காங்கிரஸை தோற்கடிக்க நீங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் அதிமுகவை ஜெயிக்க வைக்குமே?

அதுபற்றி எனக்கு கவலையில்லை. இப்போதைய நோக்கம், நமது இன எதிரி காங்கிரஸ் ஒழிய வேண்டும். அதன் பலன் யாருக்குப் போகிறது என்பது முக்கியமல்ல. பதவிக்கு வந்த பின் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்தால், அப்போது அவரையும் எதிர்ப்போம். போராட்டங்களை நடத்துவோம்.

ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் நிலைப்பாட்டை ஒருபோதும் நாம் தமிழர் ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் எங்களுக்கு ஒரு கெட்டவாய்ப்பு. வேறு வழியில்லை. எனக்கு முன் நான்கைந்து எதிரிகள் இருந்தாலும், யார் மோசமான எதிரியோ அவரைத்தான் முதலில் வீழ்த்த வேண்டியுள்ளது.

வைகோவையும் துணைக்கு அழைப்பீர்களா?

இந்தத் தேர்தலில் அண்ணன் வைகோ மற்றும் அவரது கட்சி மேற்கொண்டுள்ள முடிவு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். அவர் சிறந்த அறிவாளி. தெளிந்த அரசியல் தலைவர். எனவே பல விஷயங்களையும் யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருப்பார்.

ஆனால் அவரை அதிமுக நடத்திய விதம், கூட்டணியிலிருந்து அவர் வெளியேறும் அளவுக்கு நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் கட்சியினருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழுணர்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனதை ரணமாக்கிவிட்டது.

அருமை அண்ணன் வைகோ, எனது நிலைப்பாட்டை நிச்சயம் வாழ்த்துவார் என்று நம்புகிறேன்.

"தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடியுங்கள்" என்பதே இந்தத் தேர்தலில் எனது ஒரே பிரச்சாரம்.

உங்கள் பிரச்சாரம் எந்த அளவுக்கு காங்கிரஸை வீழ்த்த உதவும்?

அது எந்த அளவுக்கு பாதிப்பை முன்பு ஏற்படுத்தியது என்பதை காங்கிரஸ்காரர்களிடம் கேட்டுப் பாருங்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் தோற்கடித்துவிட்டு, மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பேன்.

ஈழப் பிரச்சினை பற்றி மட்டும்தான் பிரச்சாரம் செய்வீர்களா.... இங்குள்ள தமிழர்களுக்கு என்ன செய்வதாக திட்டமிட்டுள்ளீர்கள்?

இந்தத் தேர்தலில் ஈழத் தமிழினத்துக்கு இந்த காங்கிரஸ் இழைத்த அநீதி மற்றும் இங்குள்ள தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவது குறித்தெல்லாம் பிரச்சாரத்தில் சொல்லப் போகிறேன்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரவேசம் என்பது இனி வரும் இடைத்தேர்தல் ஏதாவதொன்றிலிருந்து தொடங்கும். 2016-ல் முழுவீச்சில் இருக்கும். அப்போது தமிழக மக்களுக்கு நாம் தமிழர் செய்யப் போகும் நல்ல விஷயங்கள், திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக எடுத்து வைப்பேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கைகள் குறித்து...

தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. சாப்பாடு, வீடு, துணி, கட்டிக்க பொண்டாட்டி என எல்லாமே இலவசம்... எல்லாமே பிச்சையாகக் கிடைக்கிறது தமிழனுக்கு.

இதுவா தொலைநோக்குப் பார்வை? இலவசங்கள் என்று ஒழிகின்றனவோ அன்றுதான் நாடு உருப்படும். கல்வி, வேலைவாய்ப்பை முறையாகத் தாருங்கள். நாடு மற்ற வசதிகளை தானாகவே பெற்றுக் கொள்ளும்.

ஒரு பக்கம் நாட்டின் கடன் ஏறிக் கொண்டே போகிறது. இவர்கள் இலவசங்களை அடுக்கிக் கொண்டு போகிறார்கள். கடன் வாங்கி இலவசங்களைத் தருவது ஒரு பிழைப்பா?", என்றார் ஆவேசமாக

தேர்தல் ஆணையம் எடுத்த வீடியோ, ஜெயா டிவியில் வெளியானது எப்படி? 5கோடி நஷ்டஈடு கேட்டு தேர்தல் ஆணையம் மீது வழக்கு.

தனது வீட்டை சோதனையிட்டபோது எடுத்த வீடியோவை ஜெயா டிவிக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்தின் மீது திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

நான் விதிமுறையை மீறி மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்குவதாகக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேர்தல் ஆணைய அதிகாரிகள் என் வீட்டில் சோதனை நடத்தினர். அதை வீடியோ படமும் எடுத்தனர்.

இந்த சோதனை முடிந்த சில மணி நேரத்திலேயே அந்த வீடியோ படம் ஜெயா டிவியில் வெளியானது. என் நற்பெயரை கெடுக்கவே இவ்வாறு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் எடுத்த வீடியோ படம் ஜெயா டிவிக்கு எப்படி சென்றது என்று ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

அதிகாரபூர்வமற்ற இந்த சோதனை, அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளை மீறியதாகும். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் நஷ்டஈடாக எனக்கு ரூ.5 கோடி தருவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

எனது தந்தை என் வீட்டிற்கு எதிரே ஒரு நலச்சங்கத்தை நடத்தி வருகிறார். அந்த கட்டிடத்தின் முகப்பு பலகையில் முதல்வர், துணை முதல்வர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. சோதனை நடத்திய பறக்கும் படையினர் அந்த படங்களை மூட உத்தரவிட்டனர்.

உரிய அனுமதி இல்லாமல் சோதனை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. எனது பிரசாரம் மற்றும் தேர்தல் நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். எனது வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

காங்கிரஸோடு மோதும் அ.தி.மு.க., தே.மு.தி.க.,சி.பி.எம்.,சி.பி.ஐ.,அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல்.

இந்த தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கின்ற நிலையில், காங்கிரஸோடு போட்டியிடும் கட்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றது. அதனடிப்படையில் தயாரிக்கப் பட்ட பட்டியல் உங்கள் பார்வைக்கு கொடுத்திருக்கிறேன். ஊகங்களை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

காங்கிரஸ் - அ.தி.மு.க மோதும் 37தொகுதிகள்

1. ஆவடி - தாமோதரன் - அப்துல் ரஹீம்
2. திரு.வி.க.நகர் - டாக்டர் நடேசன் - வ.நீலகண்டன்
3. ராயபுரம் - ஆர்.மனோ - ஜெயக்குமார்
4. தி.நகர் - டாக்டர் செல்லக்குமார் - வி.பி.கலைராஜன்
5. அண்ணா நகர்- அறிவழகன் - கோகுல இந்திரா
6. மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு - ராஜலட்சுமி
7. ஸ்ரீபெரும்புதூர் - டி.யசோதா - மொளச்சூர் பெருமாள்
8. மதுராந்தகம் - ஜெயக்குமார் - கணிதா சம்பத்
9. வேலூர் - ஞானசேகரன் - டாக்டர் வி.எஸ். விஜய்
10. கிருஷ்ணகிரி - ஹசீனா சயத் - கேபி முனுசாமி
11. கலசப்பாக்கம் - விஜயக்குமார் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
12. செய்யார் - விஷ்ணுபிரசாத் - முக்கூர் சுப்பிரமணியன்
13. ஆத்தூர் - அர்த்தநாரி - எஸ்.மாதேஸ்வரன்
14. ஈரோடு மேற்கு - யுவராஜா - கே.வி.ராமலிங்கம்
15. மொடக்குறிச்சி - பழனிசசாமி - ஆர்.என். கிட்டுச்சாமி
16. காங்கேயம் - விடியல் சேகர் - எஸ்எஸ்என் நடராஜ்
17. உதகை - கணேஷ் - புத்தி சந்திரன்
18. அவினாசி - நடராஜன் - ஏ.ஏ கருப்பசாமி
19. தொண்டாமுத்தூர் - கந்தசாமி - எஸ்.பி.வேலுமணி
20. சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார் - ஆர். சின்னச்சாமி
21. வேடசந்தூர் - தண்டபாணி - ச.பழனிச்சாமி
22. கரூர் - ஜோதிமணி - வி.செந்தில்பாலாஜி
23. மணப்பாறை - டாக்டர் சோமு- ஆர்.சந்திரசேகர்
24. முசிறி - எம்.ராஜசேகரன் - என்.ஆர்.சிவபதி
25. அரியலூர் - பாளை அமரமூர்த்தி - துரை மணிவேல்
26. பாபாபநாசம் - ராம்குமார் - துரைக்கண்ணு
27. திருமயம் - ராம சுப்புராம்பி.கே.வைரமுத்து
28. அறந்தாங்கி - திருநாவுக்கரசர் - மு.ராஜநாயகம்
29. கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி - சோழன் சித.பழனிச்சாமி
30. மதுரை வடக்கு - ராஜேந்திரன் - ஏ.கே.போஸ்
31. பரமக்குடி - கேவி.ஆர். பிரபு - எஸ்.சுந்தர்ராஜ்
32. விளாகத்திகுளம் - பெருமாள் சாமி - ஜி.வி மார்க்கண்டேயன்
33. வாசுதேவநால்லூர் - கணேசன்டாக்டர் எஸ். துரையப்பா
34. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி - எஸ்.பி.சண்முகநாதன்
35. குளச்சல் - ராபர்ட் புரூஸ் - பி.லாரன்ஸ்
36. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப் - ஆர்.ஜார்ஜ்
37. பூந்தமல்லி - காஞ்சி ஜி.வி.மதியழகன - மணிமாறன்


காங்கிரஸ் - தே.மு.தி.க மோதும் 15தொகுதிகள்

1. திருத்தணி - சதாசிவலிங்கம் - மு.அருண் சுப்ரமணியன்
2. ஆலந்தூர் - டாக்டர் காயத்ரி தேவி - பண்ருட்டி ராமச்சந்திரன்
3. சோளிங்கர் - அருள் அன்பரசு - பி.ஆர்.மனோகர்
4. ஓசூர் - கோபிநாத் - ஜான்சன்
5. செங்கம் - செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை - டி.சுரேஷ் குமார்
6. ரிஷிவந்தியம் - சிவராஜ் - விஜயகாந்த்
7. சேலம் வடக்கு - ஜெயப்பிரகாஷ் - மோகன் ராஜ்
8. திருச்செங்கோடு - எம்.ஆர்.சுந்தரம் - பி. சம்பத்குமார்
9. மயிலாடுதுறை - ராஜ்குமார் - பால அருட்செல்வன்
10. விருத்தாச்சலம் - நீதிராஜன் - முத்துகுமார்
11. பட்டுக்கோட்டை - ரங்கராஜன் - செந்தில் குமார்
12. பேராவூரணி - மகேந்திரன் - அருண்பாண்டியன்
13. திருப்பரங்குன்றம் - சுந்தரராஜன் - ஏ.கே.டி ராஜா.
14. விருதுநகர் - நவீன் ஆம்ஸிடராங் - க. பாண்டிராஜன்
15. ராதாபுரம் - வேல்துரை - மைக்கேல் ராயப்பன்


காங்கிரஸ் - சி.பி.எம் மோதும் 3 தொகுதிகள்

1. மதுரை தெற்கு - வரதாஜன் - அண்ணாதுரை
2. திருப்பூர் தெற்கு -கே.செந்தில்குமார் -தங்கவேலு
3. விளவங்கோடு - விஜயதரணி - லீமா ரோஸ்


காங்கிரஸ் - சி.பி.ஐ மோதும் 3 தொகுதிகள்

1. வால்பாறை - கோவை தங்கம் - எம்.ஆறுமுகம்
2. திருத்துறைப்பூண்டி - செல்லத்துரை - உலகநாதன்
2. சிவகங்கை - ராஜசேகரன் - குணசேகரன்


காங்கிரஸ் - ம.ம.க. மோதும் 2தொகுதிகள்

1. ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன் - அஸ்லாம் பாஷா-ம.ம.க.
2. ராமநாதபுரம் -கே.என்.அசன் அலி - ஜவாஹிருல்லா -ம.ம.க.


காங்கிரஸ் - பிறகட்சிகள் மோதும் 3தொகுதிகள்

1. நிலக்கோட்டை - ராஜாங்கம் - இரா.அ.ராமசாமியும் -புதிய தமிழகம்
2. நாங்குநேரி - வசந்தகுமார் - எர்ணாவூர் நாராயணன் அ.இ.ச.ம.க.
3. கடையநல்லூர் - பீட்டர்அல்போன்ஸ் -செந்தூர்பாண்டியன்-அதிமுககூட்டணி

Wednesday, March 23, 2011

காங்கிரஸ் 63 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

1. திருத்தணி - சதாசிவலிங்கம் 2. ஆவடி - தாமோதரன்
3. திரு.வி.க.நகர் - டாக்டர் நடேசன் 4. ராயபுரம் - ஆர்.மனோ
5. தி.நகர் - டாக்டர் செல்லக்குமார் 6. அண்ணா நகர்- அறிவழகன்
7. மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு
8. ஸ்ரீபெரும்புதூர் - டி.யசோதா
9. மதுராந்தகம் ஜெயக்குமார்
10. ஆலந்தூர் - டாக்டர் காயத்ரி தேவி
11. வேலூர் - ஞானசேகரன்
12. சோளிங்கர் - அருள் அன்பரசு
13. ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்
14. ஓசூர் - கோபிநாத்
15. கிருஷ்ணகிரி - ஹசீனா சயத்
16. கலசப்பாக்கம் - விஜயக்குமார்
17. செங்கம் - செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை 18. ஆத்தூர் - அர்த்தநாரி
19. செய்யார் - விஷ்ணுபிரசாத் 20. ரிஷிவந்தியம் - சிவராஜ்
21. சேலம் வடக்கு - ஜெயப்பிரகாஷ் 22. திருச்செங்கோடு - எம்.ஆர்.சுந்தரம்
23. ஈரோடு மேற்கு - யுவராஜா 24. மொடக்குறிச்சி - பழனிசசாமி
25. காங்கேயம் - விடியல் சேகர்
26. உதகை - கணேஷ்
27. அவினாசி - நடராஜன் 28. தொண்டாமுத்தூர் - கந்தசாமி
29. சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்
30. வால்பாறை - கோவை தங்கம்
31. நிலக்கோட்டை - ராஜாங்கம் 32. வேடசந்தூர் - தண்டபாணி
33. கரூர் - ஜோதிமணி 34. மணப்பாறை - டாக்டர் சோமு
35. முசிறி - எம்.ராஜசேகரன்
36. அரியலூர் - பாளை அமரமூர்த்தி
37. விருத்தாச்சலம் - நீதிராஜன் 38. மயிலாடுதுறை - ராஜ்குமார்
39. திருத்துறைப்பூண்டி - செல்லத்துரை 40. பாபாபநாசம் - ராம்குமார்
41. பட்டுக்கோட்டை -ரங்கராஜன் 42. திருமயம் - ராம சுப்புராம்
43. பேராவூரணி - மகேந்திரன்
44. அறந்தாங்கி - திருநாவுக்கரசர்
45. கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி 46. சிவகங்கை - ராஜசேகரன்
47. மதுரை வடக்கு - ராஜேந்திரன் 48. மதுரை தெற்கு - வரதாஜன்
49. திருப்பரங்குன்றம் - சுந்தரராஜன் 50. விருதநகர் - நவீன் ஆம்ஸிடராங்
51. பரமக்குடி - கேவி.ஆர். பிரபு
52. விளாகத்திகுளம் - பெருமாள் சாமி
53. வாசுதேவநால்லூர் - கணேசன் 54. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
55. நாங்குநேரி - வசந்தகுமார் 56. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
57. ராதாபுரம் - வேல்துரை 58. குளச்சல் - ராபர்ட் புரூஸ்
59. விளவங்கோடு - விஜயதரணி 60. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்
61. பூந்தமல்லி -காஞ்சி ஜி.வி.மதியழகன் 62. ராமநாதபுரம் - கே.என்.அசன் அலி
63. திருப்பூர் தெற்கு -கே.செந்தில்குமா

திமுகவின் கோடீஸ்வர வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ. 122 கோடி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளராக கே.சி. பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அரவக்குறிச்சியில் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியலையும் சமர்பித்தார்.

அதன்படி கே.சி. பழனிசாமியின் கையிருப்பு ரூ. 24 லட்சமும், வங்கிகளில் வைப்புத் தொகை, நிலைவைப்பு, காலவைப்பு, சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட வகைகளில் ரூ. 68.40 லட்சமும், நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடனீட்டுப் பத்திரங்கள், பங்குகள் மூலமாக ரூ. 28.53 கோடியும், மோட்டார் வாகனங்களாக ரூ. 22.59 லட்சமும், தங்க நகைகளாக ரூ. 45 ஆயிரமும் உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 29 கோடியே 68 லட்சத்து 58 ஆயிரத்து 187 ஆகும்.

மேலும், வேளாண் நிலமாக ரூ 49.79 லட்சமும், வேளாண்மை அல்லாத பிற நிலங்களாக ரூ 10 கோடிக்கும், வணிகக் கட்டடங்களாக ரூ 1.62 கோடிக்கும், குடியிருப்புக் கட்டடங்களாக ரூ 21.53 கோடிக்கும் சொத்து உள்ளதாகவும், இவற்றின் மொத்த மதிப்பு ரூ 63.35 கோடியாகும்.

அவரது மனைவி அன்னம்மாள் பெயரில் நிறுவனங்களில் முதலீடாக ரூ. 1.20 கோடியும், தங்க நகைகளாக ரூ. 95.87 லட்சமும், குடியிருப்புக் கட்டிடங்களாக ரூ. 2.08 கோடியும் உள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 4.29 கோடியாகும்.

கே.சி. பழனிசாமியின் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவரது மகன் கே.சி.பி. சிவராமன் பெயரில் ரூ. 53.58 கோடிக்கு சொத்து உள்ளது.

நிறுவனங்கள், கடனீட்டுப் பத்திரங்கள், பங்குகளில் முதலீடாக ரூ. 5.48 கோடியும், மோட்டார் வாகனங்களாக ரூ. 1.14 கோடியும், வேளாண்மை அல்லாத நிலமாக ரூ. 41.64 கோடியும், வணிக கட்டிடங்களாக ரூ. 1.19 கோடியும் உள்ளது.

இவரது மனைவி எஸ். சுதாவிடம் தங்க நகைகளாக ரூ. 75 லட்சமும், பிற வகைகளையும் சேர்த்து ரூ. 85.67 லட்சம் சொத்து உள்ளது.

கே.சி. பழனிசாமியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேரின் சொத்து மதிப்பு ரூ. 122 கோடியே 8 லட்சத்து 69 ஆயிரத்து 148 ஆகும்.

திமுகவில், அதன் தலைவர் கருணாநிதியை விட கோடீஸ்வர வேட்பாளர் கே.சி. பழனிசாமி தான்.

''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'

''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'' - இந்த வார்த்தைகளை வைகோ உச்சரித்தபோது தொண்டர்களின் கைதட்டலால் காஞ்சிபுரமே கிடுகிடுத்தது!

காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க. மாநாடு என்று அறிவிக்கப்பட்டதுமே, ஊரின் அனைத்துச் சுவர்களையும் வளைத்து விளம்பரங்களாக எழுதித் தள்ளினார் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் வெங்கடேசன். ஆனால் அவர் சாராயம் விற்ற வழக்கில் கைதானார். ''திரும்பிய பக்கமெல்லாம் ம.தி.மு.க. கொடியையும், அண்ணாவையும், வைகோவையும் வரைந்து வைத்தார் வெங்கடேசன். ஸ்டாலின் இங்கு வந்து சென்ற இரண்டாவது நாளே அவர் மீது சாராய கேஸ்!

''நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்துக்காக மட்டுமே வைகோ குரல் கொடுத்தார். 11 பிரதமர்களின் முன்னால் சிங்கத்தைக் குகையில் சந்திப்பதைப்போல பிடரியைப் பிடித்து உலுக்கியவர் வைகோ. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டைப் பார்த்து டெல்லி அஞ்சியது. ஆனால், சோனியாவுக்கு பயம் போய்விட்டது. அதற்குக் காரணம் கருணாநிதிதான். அவர் ராஜாவையே மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாறிவிட்டார்! இந்த அடிமை மனோபாவமும், குடும்பப் பாசமும் இருக்கும் வரை கருணாநிதியால் இந்த இனத்துக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை!'' என்று செந்திலதிபன் சொன்னதற்குப் பின்னால், மைக் பிடித்த நாஞ்சில் சம்பத்தின் பேச்சு மொத்தக் கூட்டத்தையும் சிரிப்பு மழையால் நனையவைத்தது.

''இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று தாசில்தார் ஒருவர் தடுத்திருக்கிறார். உன்னைத் தூண்டிவிடுவது யார், குன்றத்தூர் குள்ளனா?'' என்று அவர் சொன்னபோது ஏதோ புரிந்தாற்போல் பலத்த விசில்.

இரவு 8.45 மணிக்கு மைக் பிடித்தார் வைகோ. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி... முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவங்களை அவர் விவரித்து முடிப்பது வரை மொத்தக் கூட்டத்தையும் தனது வார்த்தைகளால் கட்டிப் போட்டிருந்தார்.

''நான் தமிழ்நாட்டு மக்களின் ஊழியன். இந்த நாட்டுக்காக... மொழிக்காக உழைப்பவன். கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கும் சேர்த்து நான் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், 'ஒரு குடும்பத்தின் ஆதிக்கமா... தமிழ்நாட்டின் ஜனநாயகமா? எது தேவை?' என்ற ஒரு கேள்வியின் அடிப்படையிலே இந்தத் தேர்தலே நடக்கப்போகிறது...'' என்பதை பகிரங்கமாக அறிவித்த வைகோ, இந்த மாநாட்டில் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

''2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் சிறையில் இருந்து வெளியே வந்த நாள். அன்று இரவில் கலைஞரை சந்தித்தேன். 'உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்றேன். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரே ஒரு ஸீட் அதிகம் வேண்டும். கணேச மூர்த்திக்குத் தாருங்கள்' என்றேன். உடனே கலைஞர், 'அதெல்லாம் முடியாது. அதுக்கு மேல் கொடுக்க முடியாது!' என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வரப் போனார்.

பிறகு திடீரென்று நின்றவர், 'எனக்குப் பிறகு நீதான்யா... உன் கட்சிதான்யா தி.மு.க-வா இருக்கும்!' என்று தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பதறிப்போனேன். 'ஏன் அண்ணே, இப்படி எல்லாம் பேசுறீங்க! நீங்க 100 வருஷம் இருப்பீங்கண்ணே!' என்று சொன்னேன். அன்றைக்கு என்னை சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்ன பசப்பு வார்த்தைகள் அவை. எனவே, முக்கியஸ்தர்களுக்கு மட்டும் இதைச் சொன்னேன். கட்சித் தொண்டர்களுக்கு இதை முதல் தடவையாகச் சொல்கிறேன்!'' என்ற வைகோ....

''இன்றைக்குச் சொல்கிறேன்... கலைஞர் அவர்கள் 100 ஆண்டுகள் வரை நல்ல நலத்துடன்... திடத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுக்கு முன்னால் உங்களது குடும்ப அரசியல் நொறுங்கிப்போகும். உண்மையான தி.மு.க-வாக ம.தி.மு.க-தான் இருக்கும். உமர் முக்தாரை தூக்கிலேற்றும்போது, அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஒரு சிறுவன் ஓடுவான். அதைப்போல, அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்ற நான் இருப்பேன். ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் எனக்கு வீர வாள் ஒன்றைக் கொடுத்தார்கள். அது தங்க வாளோ, வெள்ளி வாளோ அல்ல. உண்மையான வாள். கூர்மையாக இருந்தது. இதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன்'' என்று முடித்தபோது... தொண்டர்கள் அனைவரும் முறுக்கேறி இருந்தார்கள்!

Tuesday, March 22, 2011

தி.மு.க.வோடு மோதும் அ.தி.மு.க.,தே.மு.தி.க.,கம்யூனிஸ்டுகள் வேட்பாளர் பட்டியல்.

தி.மு.க., அ.தி.மு.க., இடையே 84 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., 160 தொகுதிகளிலும், தி.மு.க., 119 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

தி.மு.க அ.தி.மு.க., மோதும் 84 தொகுதிகள்


தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்கள்.


1. ஆயிரம் விளக்கு - அசன்முகமது ஜின்னா - பா.வளர்மதி
2. சைதாப்பேட்டை - மகேஷ்குமார் - செந்தமிழன்
3. ஆர்.கே.நகர் - பி.கே.சேகர்பாபு - வெற்றிவேல்
4. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின் - சைதை துரைசாமி
5. வில்லிவாக்கம் - க.அன்பழகன் - ஜே.சி.டி.பிரபாகரன்
6. பொன்னேரி (தனி) - மணிமேகலை - பொன்.ராஜா
7. திருவள்ளூர் - இ.ஏ.பி.சிவாஜி - பி.வி.ரமணா
8. அம்பத்தூர் - ப.ரங்கநாதன் - எஸ்.வேதாச்சலம்
9. மாதவரம் - டாக்டர் கனிமொழி - வி.மூர்த்தி
10. திருவொற்றியூர் - கே.பி.பி.சாமி - கே.குப்பன்
11. பல்லாவரம் - தா.மோ.அன்பரசன் - ப.தன்சிங்
12. தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா - சின்னையா
13. உத்திரமேரூர் - பொன் குமார் - வாலாஜாபாத் கணேசன்
14. காட்பாடி - துரைமுருகன் - எஸ்.ஆர்.கே.அப்பு என்ற ராதாகிருஷ்ணன்
15. ராணிப்பேட்டை - ஆர்.காந்தி - முகம்மத்ஜான்
16. திருப்பத்தூர் - எஸ்.ராஜேந்திரன் - கே.ஜி.ரமேஷ்
17 திருவண்ணாமலை - ஏ.வ.வேலு - எஸ்.ராமச்சந்திரன்
18 கீழ்பெண்ணாத்தூர் - கு.பிச்சாண்டி - ஏ.கே.அரங்கநாதன்
19 வந்தவாசி (தனி) - கமலக்கண்ணன் - செய்யாமூர் குணசீலன்
20 வானூர் (தனி) - புஷ்பராஜ் - ஜானகிராமன்
21 விழுப்புரம் - க.பொன்முடி - சி.வி.சண்முகம்
22 சங்கராபுரம் - உதயசூரியன் - மோகன்
23 கடலூர் - புகழேந்தி - எம்.சி.சம்பத்
24 குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - சொரத்தூர் ராஜேந்திரன்
25 திருவிடைமருதூர் - கோவி.செழியன் - பாண்டியராஜன்(தனி)
26 கும்பகோணம் - க.அன்பழகன் - ராம.ராமநாதன்
27 திருவையாறு - கல்லணை செல்லக்கண்ணு - ரத்தினசாமி
28 தஞ்சாவூர் - எஸ்.என்.எம்.உபயதுல்லா - எம்.ரங்கசாமி
29 ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி - வைத்திலிங்கம்
30 மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா - சிவா.ராஜமாணிக்கம்
31 திருவாரூர் - மு.கருணாநிதி - குடவாசல் ராஜேந்திரன்
32 நன்னிலம் - இளங்கோவன் - ஆர்.காமராஜ்
33 ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த் - ஜெ.ஜெயலலிதா
34 திருச்சி மேற்கு - கே.என்.நேரு - மரியம்பிச்சை
35 திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி - ஆர்.மனோகரன்
36 மணச்சநல்லூர் - என்.செல்வராஜ் - டி.பி.பூனாட்சி
37 துறையூர் (தனி) - பரிமளா தேவி - இந்திராகாந்தி
38 பெரம்பலூர் (தனி) - எம்.பிரபாகரன் - இளம்பை தமிழ்ச்செல்வன்
39 அரவக்குறிச்சி - கே.சி.பழனிசாமி - வி.செந்தில்நாதன்
40 கிருஷ்ணராயபுரம் - பெ.காமராஜ் - எஸ்.காமராஜ்(தனி)
41 குளித்தலை - மாணிக்கம் - பாப்பாசுந்தரம்
42 கந்தர்வக்கோட்டை - கவிதைப்பித்தன் - சுப்ரமணியன் (தனி)
43 விராலிமலை - எஸ்.ரகுபதி - டாக்டர் விஜயபாஸ்கர்
44 ஏற்காடு (தனி) - தமிழ்செல்வன் - பெருமாள்
45 சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம் - விஜயலட்சுமி பழனிச்சாமி
46 சேலம் தெற்கு - எஸ்.ஆர்.சிவலிங்கம் - எம்.கே.செல்வராஜ்
47 வீரபாண்டி - ஆ. ராஜேந்திரன் - எஸ்.கே.செல்வம்
48 சேலம் மேற்கு - இரா.ராஜேந்திரன் - ஜி.வெங்கடாஜலம்
49 ராசிபுரம் (தனி) - வி.பி.துரைசாமி - ப.தனபால்
50 குமாரபாளையம் - வெப்படை செல்வராஜ் - பி.தங்கமணி
51 பாப்பிரெட்டிபட்டி - முல்லைவேந்தன் - பழனியப்பன்
52 மேட்டுப்பாளையம் - அருண்குமார் - சின்னராஜ்
53 கவுண்டம்பாளையம் - சுப்ரமணியன் - ஆறுக்குட்டி
54 கோவை வடக்கு - வீரகோபால் - மலரவன்
55 கோவை தெற்கு - பொங்கலூர் பழனிசாமி - சேஞ்சர் துரை
56 கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன் - செ.தாமோதரன்
57 தாராபுரம் (தனி) - ஜெயந்தி - பொன்னுசாமி
58 திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி - எம்.எஸ்.எம்.ஆனந்தன்
59 மடத்துக்குளம் - மு.பெ.சாமிநாதன் - சண்முகவேலு
60 அந்தியூர் - என்.கே.கே.பி.ராஜா - எஸ்.எஸ்.ரமணிதரன்
61 மேலூர் - ராணி ராஜமாணிக்கம் - ஆர்.சாமி
62 மதுரை கிழக்கு - மூர்த்தி - தமிழரசன்
63 திருமங்கலம் - மணிமாறன் - ம.முத்துராமலிங்கம்
64 மதுரை மேற்கு - தளபதி - செல்லூர் ரா ஜு
65 பழனி - செந்தில்குமார் - வேணுகோபாலு
66 ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி - பாலசுப்பிரமணி
67 நத்தம் - விஜயன் - இரா.விஸ்வநாதன்
68 ஆண்டிபட்டி - எல்.மூக்கையா - தங்க தமிழ்செல்வன்
69 போடிநாயக்கனூர் - லட்சுமணன் - ஓ.பன்னீர்செல்வம்
70 முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி - மு.முருகன்
71 திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் - ராஜகண்ணப்பன்
72 மானாமதுரை (தனி) - தமிழரசி - குணசேகரன்
73 ராஜபாளையம் - தங்கபாண்டியன் - கே.கோபால்சாமி
74 சாத்தூர் - கடற்கரை ராஜ் - உதயகுமார்
75 சிவகாசி - வனராஜா - உதயகுமார்
76 அருப்புக்கோட்டை - சாத்தூர் ராமச்சந்திரன் - வைகைச்செல்வன்
77 சங்கரன்கோவில் - உமாமகேஸ்வரி - சொ.கருப்பசாமி (தனி)
78 ஆலங்குளம் - பூங்கோதை - பி.ஜி.ராஜேந்திரன்
79 திருநெல்வேலி - ஏ.எல்.எஸ்.லட்சுமணன் - நயினார் நாகேந்திரன்
80 அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன் - இசக்கி சுப்பையா
81 தூத்துக்குடி - கீதா ஜீவன் - ஏ.பால்
82 திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன் - பி.ஆர்.மனோகரன்
83 கன்னியாகுமரி - சுரேஷ்ராஜன் - கே.டி.பச்சைமால்
84 நாகர்கோவில் - மகேஷ் - நாஞ்சில் முருகேசன்


தி.மு.க - தே.மு.தி.க., மோதும் 18 தொகுதிகள்

1. திருக்கோவிலூர் - தங்கம் - வெங்கடேசன்
2. ஆரணி - சிவானந்தம் - மோகன்
3. கெங்கவல்லி தனி - சின்னத்துரை - சுபா
4. மதுரை மத்தி - எஸ்எஸ் கெளஸ் பாட்ஷா - ஆர்.சுந்தர்ராஜன்
5. கூடலூர் தனி - திராவிடமணி - எஸ்.செல்வராஜ்
6. திருவாடானை - சுப தங்கவேலன் - முஜ்பூர் ரஹ்மான்
7. குன்னம் - சிவசங்கரன் - துரை காமராஜ்
8. திருவெறும்பூர் - சேகரன் - செந்தில் குமார்
9. விருகம்பாக்கம் - தனசேகரன் - தா.பார்த்தசாரதி
10. லால்குடி - சவுந்திரபாண்டியன் - செந்தூரேஸ்வரன்
11. எழும்பூர் தனி - பரிதிஇளம்வழுதி - கு. நல்லத்தம்பி
12. ஈரோடு கிழக்கு - முத்துச்சாமி - சந்திரகுமார்
13. கம்பம் - ராமகிருஷ்ணன் - பி.முருகேசன்
14. சேந்தமங்கலம் - பொன்னுச்சாமி - சாந்தி ராஜமாணிக்கம்
15. பண்ருட்டி - சபா ராஜேந்திரன் - பி.சிவக்கொழுந்து
16. பத்மநாபபுரம் - புஷ்பலீலா ஆல்பன் - ஆஸ்டின்
17. வேப்பணஹள்ளி - செங்குட்டுவன் - எஸ்.எம்.முருகேசன்
18. ஆத்தூர் - திண்டுக்கல் ஐ.பெரியசாமி - எஸ்.ஆர்.கே. பாலு


தி.மு.க - கம்யூனிஸ்டுகள், மோதும் 3 தொகுதிகள் (சி.பி.எம்)

1. விக்கிரவாண்டி - ராதாமணி - ராமமூர்த்தி
2. பாளையங்கோட்டை - மைதீன்கான் - பழனி
3. கீழ்வேளூர் தனி - மதிவாணன் - நாகை மாளி

தி.மு.க - கம்யூனிஸ்டுகள், மோதும் 7 தொகுதிகள் (சி.பி..ஐ)

சி.பி.ஐ வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப் படவில்லை
.

1. பென்னாகரம் - இன்பசேகரன் - நஞ்சப்பன்
2. தளி - ஒய்.பிரகாஷ் - ராமச்சந்திரன்
3. குடியாத்தம் தனி - ராஜமார்த்தாண்டன் - லிங்கமுத்து
4. புதுக்கோ்டடை - பெரியண்ணன் அரசு - முத்துக்குமரன்
5. குன்னூர் - ராமச்சந்திரன் - தெள்ளி
6. ஸ்ரீவில்லிபுத்தூர் தனி - துரை - பொன்னுபாண்டியன்
7. பவானிசாகர் தனி - லோகேஸ்வரி - சுந்தரம்