விண்வெளியில் 10 மீட்டர் சுற்றளவு கொண்ட சிறு கிரகம் ஒன்று இருப்பதை சமீபத்தில் மெக்சிகோ நாட்டின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது கண்டுபிடித்தனர். இந்த புதிய கிரகத்துக்கு அவர்கள் 2011 எம்.டி. என்று பெயரிட்டுள்ளனர்.
ஆம்னி பஸ் அளவுக்கு இருக்கும் இந்த குட்டி கிரகம், பூமியை சுற்றி வர 396 நாட்கள் எடுத்துக் கொள்வதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த குட்டி கிரகம் இன்று (திங்கள்) பூமிக்கு மிக, மிக அருகில் வர உள்ளது.
இன்று பிற்பகல் இந்த கிரகம் பூமியில் இருந்து 7 ஆயிரத்து 500 மைல் தொலைவுக்குள் நெருங்கி வர உள்ளது. இன்று மாலை 6.56 மணிக்கு அந்த குட்டி கிரகம் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி அருகில் வந்து கடந்து செல்லும்.
பூமிக்கு அருகில் வரும் இந்த குட்டி கிரகத்தால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் வராது என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஒரு வேளை அந்த கிரகம் பூமியின் ஈர்ப்பு சக்தி பகுதிக்குள் வந்து விட்டால், பூமியின் சீதோஷ்ண நிலைக்கு தாக்குபிடிக்க முடியாமல் எரிந்து சாம்பலாகி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. இனி இந்த குட்டி கிரகம், 2023-ம் ஆண்டு மே மாதம் 10-ந் தேதி பூமிக்கு மிக நெருக்கமாக வரும்.
1 comment:
click the link and read
>>> பூமி உருண்டை அல்ல தட்டையாம் ?
பூமிக்கு அஸ்திவாரமாம்?, பூமிக்கு தூண்களாம் ? பூமிக்கு நான்கு மூலைகளாம்?. சூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்!!
.
Post a Comment