சில இலக்கியங்களில் எழுத்துவடிவில் இருந்த நான் இந்தியாவில் அவதாரம் எடுத்தது 1947க்கு பிறகுதான்! என்னை உணர்வுகளால்ல; உச்சரிக்க அழகாய் இருப்பதால் ஜனநாயகம் என்று பெயர்சூட்டி இழுத்தணைத்துக் கொண்டவர்கள் இந்தியர்கள்! மெஜாரிட்டி மாங்கல்யம் சூட்டப்பட்டதால் ஆளுங்கட்சிக்கு அடிமையாகிப்போன பெண்டாட்டி நான். எனது கல்யாணத்தேர்தல் ஆயிரங்காலத்துப் பயிரல்ல; அய்ந்தாண்டுப் பயிர்! அது நடந்தேறிய காட்சியை நான் மறக்கவில்லை! மேடை முழக்கத்தின் தாளத்தில்- எண்ணமுடியாத வாக்குறுதி ஒப்பந்தத்தின்படி- ஒரு நேரத்து சிற்றுண்டிப் பொட்டலத்தை வரதட்சனையாக்கி அள்ளிவீசப்பட்ட ஓட்டுமலர்களால். | அய்ந்தாண்டுக்கு ஆளுங்கட்சியோடு வாழ்க்கைப்பட ஒப்புதல்அளித்து புகுந்தவீட்டுக்கு போனபோதுதான் என்னை வாழ்த்தினார்கள் 'ஜனநாயகம் வாழ்க!' என்று. அய்ந்தாண்டுக்கு ஒப்பந்தப்படுத்தப்பட்ட நான் மத்தியரசு மாமியாரோடு சண்டைபோட்டு இடையிலேயே வாழாவெட்டியாவதும் உண்டு! எதிர்கட்சி நாத்திகள் என்னை விபச்சாரியாக்கும் முயற்சியையே இலட்சியமாக கொண்டார்கள்! இந்திய கெளரவர்கள் என்னை துகிலுரிக்கிறார்கள்; சபதம் செய்யஅல்ல; சப்தம் செய்யக்கூட பாண்டவர்களைக் காணோம். பாஞ்சாலிக்கு பதிவிரதை பட்டம்சூட்டிய இந்தியர்களே! இல்லாததை இருப்பதாக கூறுவதில் நீங்களே முதல் |
Monday, February 14, 2011
ஒரு சுயசரிதை.- முன்னால் மத்திய அமைச்சர். ஆ.இராசா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment