திமுக தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில் சனிக்கிழமை தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதி வெளியிட்டு அதனை வாசித்தார்.
அதன் முக்கிய அம்சங்கள் :
* கல்வியை மாநில அரசின் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்துவோம்.
* கிராமத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடத்த அனுமதியோம்.
* படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
* அரசு கல்லூரிகளில் படிக்கும் பி.சி., எம்.பி.சி. எஸ்.சி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
* தரமான இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்கும் வகையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று சீறுடை.
* அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை அறிமுகம் செய்து, கல்வித் தரத்தை உயர்த்துவோம்.
* தமிழகத்தில் பல்கலைக்கழகமே இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை எட்டுவோம்.
* தமிழகத்தில் வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தர ஏற்பாடு.
* மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துவோம்.
* வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களை குறிப்பிட்ட காலங்களுக்கு பொருளாதார ஏற்றம் பெற நடவடிக்கை.
* மகளிர் சுய உதவி கடன் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இதில், ரூ.2 லட்சம் மானியம்.
* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் இனி ரூ.1 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்.
* கலைஞர் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம் தொடரும்.
* தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
* பரம ஏழைகளுக்கு ரூ.1 அரிசி இனி இலவசமாக வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அரசு உள்ளூர் பேருந்தில் கட்டணமில்லா பயணம்.
* முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிக்கு மாத உதவித் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்படும்.
* சிறுபான்மையினருக்கு சிறப்புக் கல்வித் திட்டம்.
* மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு கிடைத்து வருகின்ற வரி வருவாய் நியாயமான முறையில் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி வர்த்தகர்கள் ஈடுபட அனுமதி இல்லை.
* செம்மொழியாயான தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை.
* திருக்குறளை தேசிய நூலாக்க பாடுபடுவோம்.
* மாநகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோவை, மதுரை நகரில் புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்போம்.
* புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.
* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்.
* விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு செல்லாத வகையில் பாதுகாப்போம்.
* நகர்புறங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும்.
* திருச்சி, மதுரையில் மன நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* மதுரையில் காசநோய் மருத்துவமனை.
* மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.
* எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள்.
* நடக்க முடியாத முதிய நோயாளிக்கு வீட்டிலேயே மருத்துவர் மூலம் சிகிச்சை பெற சிறப்பு நடவடிக்கை.
* மீனவர் நலனுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும்.
* தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை காண மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* சேது கால்வாய் திட்டத்தை முடிக்க தொடர்ந்து பாடுபடுவோம்.
* முல்லைப் பெரியாறு, காவிரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு கண்டு தமிழக உரிமைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் ஆட்சியில் பங்கு கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தக் கூறுவோம்.
* தலித் கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர் பிரிவில் இடம்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி.
* திருநங்கைகள் சுய உதவிக் குழு அமைக்கப்படும்.
No comments:
Post a Comment