Friday, April 8, 2011

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி.


சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

4வது ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.


இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் அனிருதா 55 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 64 ரன்களும், ரெய்னா 33 ரன்களும், டோனி 29 ரன்களும் எடுத்தனர்.


154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.


கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக காலிஸ் 54 ரன்களும், மனோஜ் திவாரி, பிஸ்லா ஆகியோர் தலா 27 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.



விஜயகாந்த் டெபாசிட் வாங்க கூடாது: ராமதாஸ்


ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் டெபாசிட் வாங்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பொன்முடி அவர்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அதாவது எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் டெபாசிட் வாங்க கூடாது.

இதேபோல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சிவராஜ் அவர்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது.

இதேபோல் வானூர் தொகுதியில் புஷ்பராஜ், உளுந்தூர் பேட்டையில் முகமது யூசப், கள்ளக்குறிச்சியில் பாவரசு, விக்கிரவாண்டியில் ராதாமணி, சங்கராபுரத்தில் உதயசூரியன் ஆகியோர் வெற்றி பெற வேண்டும். இதற்கு பாமக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


கலைஞர் ஆட்சி தேவையா? அம்மா ஆட்சி தேவையா? கி.வீரமணி.


கலைஞர் ஆட்சி தேவையா? அம்மா ஆட்சி தேவையா? கி.வீரமணி.

மற்ற மாநிலங்களில், மனிதனை மனிதன் இழுக்கின்ற கைரிக்ஷா இன்றைக்கும் இருக்கிறதே, கலைஞர் வந்தவுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் நாட்டில் மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்து, அதற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா திட்டம் கொண்டு வந்தார். அதுதான் மனித நேயம். எனவே நம்முடைய எதிர்காலத்திற்கு, வாழ்வதற்கு பெரிய வாய்ப்புகள் கொடுக்கும் கலைஞர் ஆட்சி தேவையா? அம்மா ஆட்சி தேவையா?

இந்தத் தேர்தலை, மக்கள் தேர்தல் களமாகப் பார்க்கவில்லை. இனப்போராட்ட களமாக, திராவிடர் ஆரியர் போராட்டமாகக் கருதுகிறார்கள். அதை எங்களைப் போன்றவர்கள் உணர்கிறோம். இது ஸ்ரீக்கும், திரு-வுக்கும் போராட்டம், பரம்பரைப் போராட்டம். ஏனென்றால் அவர்கள் தங்கள் பரம்பரையைத் தேடிப் போய் இருக்கிறார்கள்.

உழைக்கின்ற, பாட்டாளி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மறுக்கப்பட்டு இருந்ததை மாற்றி, திராவிடர் சமுதாயம் மூலம் ஒரு வளர்ச்சியை, எழுச்சியை பெற கலைஞர் அரசு பாடுபட்டுக்கொண்டு வருகிறது. சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது.

தேர்தல் என்பது இது ஒரு கட்சிப் பிரச்சனை அல்ல. மதப் பிரச்சனை அல்ல. மாறாக நம் இனத்தின் வாழ்க்கை பிரச்சனை இதில்தான் நம் இனம் வாழ்வதா? வீழ்வதா? என்ற நிலை அடங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில்தான் அனைத்து மக்களும், சிறுபான்மை மக்களுடன் உறவுக்காரர்கள் போன்று செயல்பட்டு, பழகிக்கொண்டு இருக்கிறோம். இதுபோல் வேறு நாட்டில் உண்டா. வேறு மாநிலத்தில்தான் உண்டா. மக்களிடையே வெறுப்பை தூவுவதற்கு, தூண்டுவதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் வருகிறது.

திராவிடர் இயக்கம் வளர்ந்தால், சிறுபான்மை சமுதாயமாக இருந்தாலும், பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும், எல்லோரும் கைகோத்துக்கொண்டு சகோதரர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மிகப்பெரிய ஒற்றுமையாளர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இந்த சூழ்நிலை மற்ற அமைப்புகள் வந்தால் தொடராது. எனவே, கலைஞர் தலைமையில் உள்ள அணி வெற்றி பெறுவது யாருடைய சுயநலத்திற்காகவும் அல்ல. தமிழ் இனத்தின் மீட்புக்காக, எதிர் காலத்திற்காக. இவ்வாறு கி.வீரமணி பேசினார்.


கலைஞரின் உயர் எண்ணமும் ஜெயலலிதாவின் உருமாறும் எண்ணமும்.


பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் அந்த அம்மா ஆட்சியில் தற்காலிகமாக வேலைக்கு ஆள்களை எடுத்தார்கள். சிறிது காலம் கழித்து அவர்கள். தங்களை நிரந்தரமாக பணியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டம். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த அம்மா அவர்களை பணியில் இருந்து தூக்கி விட்டு தனது கட்சிக்காரர்களை வேலையில் அமர்த்தினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. கலைஞரிடம், அவர்களின் பதவிக் காலம் முடிவடையப்போகிறது எங்களுக்கு அந்த பணியை வழங்குங்கள் என்று கேட்டார்கள்.

நாங்கள் எல்லாம் உடன் இருந்தோம். உடனே, கலைஞர் சொன்னார் அவர்கள் யாராக இருந்தாலும் நம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான் வேலையில் இருக்கட்டும் என்று கூறியதோடு புதிதாக வேண்டுமானால் வேலைக்கு ஆள்களை சேர்த்துக்கொள்ளலாம். அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்றவர் கலைஞர்.

அந்த அம்மா ஆட்சியில் என்ன செய்தார் என்றால், 1 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டார். அதை எப்படியோ கம்யூனிஸ்ட் நண்பர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள். இதிலிருந்து தெரிகிறதா? கலைஞரின் உயர் எண்ணமும், அந்த அம்மாவின் உருமாறுகின்ற எண்ணமும். இவ்வாறு கி.வீரமணி பேசினார்


சென்னையில் 4வது ஐபிஎல் போட்டித் தொடர் கோலாகலமாக தொடங்கியது.


4வது ஐபிஎல் டுவென்டி 20 போட்டித் தொடர் இன்று மாலை சென்னையில் கோலாகலமான கலை விழாவுடன் தொடங்கியது.

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் டுவென்டி 20 போட்டிகள் வருடத்திற்கு ஒருமுறை நடந்து வருகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியனானது. 2009ல் நடந்த போட்டித் தொடரில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பட்டம் வென்றது. தென் ஆப்பிரிக்காவில் 2010ல் நடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் ஆனது.

இந்த நிலையில் தற்போது 4வது போட்டித் தொடர் இன்று தொடங்கியது.

இன்று தொடங்கி மே 28ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 74 போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் காத்துள்ளன.

இதுவரை இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய எட்டு அணிகளுடன் புதிதாக சஹாரா புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரு அணிகளும் இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் போட்டி நடைபெறவுள்ளது.

கோலாகல தொடக்க விழா.

இன்று மாலை ஆறரை மணியளவில் தொடக்க விழா நடைபெற்றது.

போட்டியின் தொடக்கத்தில் ஐபிஎல் ஆணையர் சிரயு அமீன் தொடக்க உரையாற்றினார். பின்னர் பத்து அணிகளின் கேப்டன்களும் உறுதிமொழிக் கையெழுத்தை இட்டனர். அதன் பின்னர் போட்டி தொடங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தொடக்க விழா தொடங்கியது. இதில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு அழகிகள், நடிகைகள் உள்ளிட்டோர் ஆடிப் பாடி, ரசிகர்களை குஷிப்படுத்தவுள்ளனர். சூப்பர் ஸ்டார் ஷாருக் கானும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை அளிக்கிறார். அவரும் நடிகை ஷ்ரியாவும் இணைந்து இந்தி மற்றும் தமிழ்ப் பாடல்களுக்கு ஆடுகின்றனர்.

சுனிதி செளகான், குனால் கஞ்சாவாலா, சோனா மொஹபாத்ரா, அக்ரிதி காக்கர் ஆகியோர் பாடவுள்ளனர்.

முதல் போட்டி.

தொடக்க விழாவுக்குப் பின்னர் இரவு 8 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதவுள்ளன.

ஐபிஎல் தொடரின் தொடக்க விழா சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் குஷியுடன் தயாராகி வருகின்றனர்.

இரு பிரிவுகள்.

10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

போட்டி நடைபெறும் இடங்கள்.

சென்னை, பெங்களூர், டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொச்சி, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நவி மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும். முதலிடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் தோற்கும் அணி 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும்.

பழைய அணிகள் எட்டிலும் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு வரை ஒரு அணிக்காக ஆடிய பல வீரர்கள் இந்த முறை அணி மாறியுள்ளனர்.

கேப்டன்களைப் பொறுத்தவரை, சென்னை (டோனி), மும்பை (டெண்டுல்கர்), ராஜஸ்தான் (வார்னே) ஆகிய அணிகளில் மாற்றம் இல்லை. மற்ற அணிகளில் கேப்டன்கள் மாறியுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங் தற்போது புனே வாரியர்ஸுக்கு வந்துள்ளார். கொல்கத்தா நைட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலி நீக்கப்பட்டு கெளதம் கம்பீர் கேப்டனாகியுள்ளார். கொச்சி அணிக்கு மஹேளா ஜெயவர்த்தனே கேப்டனாகியுள்ளார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த கும்ப்ளே இந்த முறை இல்லை. டேணியல் வெட்டோரி புதிய கேப்டனாகியுள்ளார்.

இதுவரை டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டனாக இருந்த கில்கிறைஸ்ட் இம்முறை கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு மாறியுள்ளார்.


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை.


4 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு :



ஏப் 8: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை இரவு 8 மணி


ஏப் 9: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐதராபாத் மாலை 4 மணி

ஏப் 9: கொச்சி டஸ்கர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கொச்சி இரவு 8 மணி

ஏப் 10: டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை இந்தியன்ஸ் டெல்லி மாலை 4 மணி

ஏப் 10: புனே வாரியர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை இரவு 8 மணி

ஏப் 11: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் கொல்கத்தா இரவு 8 மணி

ஏப் 12: ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் ஜெய்ப்பூர் மாலை 4 மணி

ஏப் 12: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை இந்தியன்ஸ் பெங்களூர் இரவு 8 மணி

ஏப் 13: கிங்ஸ் லெவன் பஞ்சாப் சென்னை சூப்பர் கிங்ஸ் மொகாலி மாலை 4 மணி

ஏப் 13: புனே வாரியர்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் மும்பை இரவு 8 மணி

ஏப் 14: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐதராபாத் இரவு 8 மணி

ஏப் 15: ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெய்ப்பூர் மாலை 4 மணி

ஏப் 15: மும்பை இந்தியன்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் மும்பை இரவு 8 மணி

ஏப் 16: சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை மாலை 4 மணி

ஏப் 16: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐதராபாத் இரவு 8 மணி

ஏப் 17: புனே வாரியர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை மாலை 4 மணி

ஏப் 17: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா இரவு 8 மணி

ஏப் 18: கொச்சி டஸ்கர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் கொச்சி இரவு 8 மணி

ஏப் 19: டெல்லி டேர்டெவில்ஸ் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் டெல்லி மாலை 4 மணி

ஏப் 19: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் இரவு 8 மணி

ஏப் 20: மும்பை இந்தியன்ஸ் புனே வாரியர்ஸ் மும்பை மாலை 4 மணி

ஏப் 20: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் கொல்கத்தா இரவு 8 மணி

ஏப் 21: கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராஜஸ்தான் ராயல்ஸ் மொகாலி இரவு 8 மணி

ஏப் 22: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தா மாலை 4 மணி

ஏப் 22: மும்பை இந்தின்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இரவு 8 மணி

ஏப் 23: டெல்லி டேர்டெவில்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டெல்லி இரவு 8 மணி

ஏப் 24: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஐதராபாத் மாலை 4 மணி

ஏப் 24: ராஜஸ்தான் ராயல்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் ஜெய்ப்பூர் இரவு 8 மணி

ஏப் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் புனே வாரியர்ஸ் சென்னை இரவு 8 மணி

ஏப் 26: டெல்லி டேர்டெவில்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் டெல்லி இரவு 8 மணி

ஏப் 27: புனே வாரியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை மாலை 4 மணி

ஏப் 27: கொச்சி டஸ்கர்ஸ் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் கொச்சி இரவு 8 மணி

ஏப் 28: டெல்லி டேர்டெவில்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி இரவு 8 மணி

ஏப் 29: ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஜெய்ப்பூர் மாலை 4 மணி

ஏப் 29: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் புனே வாரியர்ஸ் பெங்களூர் இரவு 8 மணி

ஏப் 30: கொச்சி டஸ்கர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் கொச்சி மாலை 4 மணி

ஏப் 30: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கொல்கத்தா இரவு 8 மணி

மே 1: ராஜஸ்தான் ராயல்ஸ் புனே வாரியர்ஸ் ஜெய்ப்பூர் மாலை 4 மணி

மே 1: சென்னை சூப்பர் கிங்ஸ் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை இரவு 8 மணி

மே 2: மும்பை இந்தியன்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை மாலை 4 மணி

மே 2: டெல்லி டேர்டெவில்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் டெல்லி இரவு 8 மணி

மே 3: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐதராபாத் மாலை 4 மணி

மே 4: சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை மாலை 4 மணி

மே 4: புனே வாரியர்ஸ் மும்பை இந்தியன்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 5: கொச்சி டஸ்கர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொச்சி மாலை 4 மணி

மே 5: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் ஐதராபாத் இரவு 8 மணி

மே 6: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெங்களூர் இரவு 8 மணி

மே 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா மாலை 4 மணி

மே 7: மும்பை இந்தியன்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 8: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் பெங்களூர் மாலை 4 மணி

மே 8: கிங்ஸ் லெவன் பஞ்சாப் புனே வாரியர்ஸ் மொகாலி இரவு 8 மணி

மே 9: ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெய்ப்பூர் இரவு 8 மணி

மே 10: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் புனே வாரியர்ஸ் ஐதராபாத் மாலை 4 மணி

மே 10: கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை இந்தியன்ஸ் மொகாலி இரவு 8 மணி

மே 11: ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஜெய்ப்பூர் இரவு 8 மணி

மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் சென்னை இரவு 8 மணி

மே 13: கொச்சி டஸ்கர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இந்தூர் இரவு 8 மணி

மே 14: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூர் மாலை 4 மணி

மே 14: மும்பை இந்தியன்ஸ் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 15: கிங்ஸ் லெவன் பஞ்சாப் டெல்லி டேர்டெவில்ஸ் தர்மசாலா இரவு 8 மணி

மே 15: கொச்சி டஸ்கர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் இந்தூர் இரவு 8 மணி

மே 16: புனே வாரியர்ஸ் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 17: கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் தர்மசாலா இரவு 8 மணி

மே 18: சென்னை சூப்பர் கிங்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் சென்னை இரவு 8 மணி

மே 19: புனே வாரியர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 20: மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 21: கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் தர்மசாலா மாலை 4 மணி

மே 21: டெல்லி டேர்டெவில்ஸ் புனே வாரியர்ஸ் டெல்லி இரவு 8 மணி

மே 22: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் மாலை 4 மணி

மே 22: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா இரவு 8 மணி

இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்று

மே 24: லீக் சுற்றில் முதலிடம் 2 வது இடம் மும்பை இரவு 8 மணி

மே 25: லீக் சுற்றில் 3 வது இடம் 4 வது இடம் மும்பை இரவு 8 மணி

மே27: முதல் தகுதிசுற்றில் தோற்கும் அணி 2 வது தகுதி சுற்றில் வெல்லும் அணி சென்னை இரவு 8 மணி

மே 28: இறுதிப் போட்டி சென்னை இரவு 8 மணி


ஐ.பி.எல்., தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் 14 லீக் போட்டிகள் அட்டவணை.


நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும், தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் "டுவென்டி-20' தொடர் நடந்து வருகிறது. நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், இந்த ஆண்டு ஏப். 8 ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது.

போட்டி அட்டவணை.

சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டங்கள்.

4வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் ஆட்டங்கள் விவரம் வருமாறு:

ஏப் 8: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா சென்னை இரவு 8 மணி

ஏப் 13: கிங்ஸ் லெவன் பஞ்சாப் சென்னை மொகாலி மாலை 4 மணி

ஏப் 16: சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் சென்னை மாலை 4 மணி

ஏப் 18: கொச்சி சென்னை சூப்பர் கிங்ஸ் கொச்சி இரவு 8 மணி

ஏப் 22: மும்பை சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இரவு 8 மணி

ஏப் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் புனே சென்னை இரவு 8 மணி

ஏப் 27: புனே சென்னை சூப்பர் கிங்ஸ் நவிமும்பை மாலை 4 மணி

மே 1: சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை இரவு 8 மணி

மே 4: சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் சென்னை மாலை 4 மணி

மே 7: கொல்கத்தா சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா மாலை 4 மணி

மே 9: ராஜஸ்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெய்ப்பூர் இரவு 8 மணி

மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி சென்னை இரவு 8 மணி

மே 18: சென்னை சூப்பர் கிங்ஸ் கொச்சி சென்னை இரவு 8 மணி

மே 22: பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் மாலை 4 மணி

தேர்தல் ஆணையத்தின் கண்களில் மிளகாய் தூவ அ.தி.மு.க. ரெடி.


நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, சுவர் விளம்பரங்கள், பேனர், கட்அவுட், தோரணங்கள், உட்பட எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் தடை செய்துவிட்டது.

தேர்தல் என்றாலே திருவிழாவாய் காட்சிதரும் தொகுதிகள் தற்சமயம் வெறிச்சோடி கலையிழந்து காணப்படுகிறது. கூட்டமாய் பிரச்சாரத்தில் ஈடுபடும் நிகழ்வுகளையும் காணவில்லை.

இதை விடக் கொடுமை என்னெவென்றால், தேர்தல் ஆணையத்தின் இது போன்ற நடவடிக்கைகளினால் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிய முடியவில்லை என்பதும் வருத்தத்திற்குறிய உண்மையே..

பழைய செய்தித் தாள்களை பத்திரமாக பக்கத்தில் வைத்திருப்பவர் வேண்டுமானால் இத் தகவல்களை அறிய முடியும், என்றால் பாமரனின், படிக்காதவனின், உலக அறிவற்ற தாய்க் குலங்களின் நிலை தான் என்ன?

செம்மறி ஆட்டுக் கூட்டங்களாய் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சின்னங்களுக்கு மட்டுமே ஓட்டு போட்டு பழகி வந்தவர்களும் இன்று தடுமாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது விழிப்புணர்வால் அல்ல. வழக்கமான சின்னத்திற்குறிய வேட்பாளர் யார் என்ற தடுமாற்றத்தினாலே!

தொகுதி மறு சீரமைப்பால் அறிந்தவனின், கற்றவனின் நிலையும்கூட இதை ஒட்டியே இருக்கிறது.

வேட்பாளர்கள், அதிலும் இரண்டுமுறை, மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினர்களாய் இருந்தவர்கள்கூட தொகுதி மாறி பிரச்சாரம் செய்தவற்றை கண்கூட காணமுடிகிறது.

சுயேட்சை வேட்பாளர்கள் சுனாமியில் அடித்துச் செல்லும் மீனாக இருக்கிறார்கள்.

ஆளுங்கட்சியாகட்டும், எதிர்கட்சியாகட்டும், நாளை ஆள்வேன் என்று சொல்பவர்களாகட்டும், வெற்றி குறித்த ஐயப்பாடு, மதில்மேல் பூனையாக இல்லாமல் யானையாகவே காட்சி தருகிறது.

இந்நிலையில்தான் சிவகாசி பகுதி அதிமுக அதிரடியாய் ஒரு அறிவிப்பை ஆட்டோவில் செய்து கொண்டு சென்றது.

அன்பார்ந்த தாய்க்குலங்களே, வருகிற 13ம் தேதி தேர்தல் நாளன்று காலையிலே உங்கள் வீட்டு வாசலில் இரட்டை இலை சின்னத்தை கோலமாக போட்டுவைக்க கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம், எல்லோருக்கும் நமது சின்னமான இரட்டை இலையை பதியவைக்க அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.

இப்படி ஆட்டோவில் அறிவிப்பு பரபரப்பாய் பறந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கு என்ன செய்யும்?