Monday, April 4, 2011

சாய்பாபாவின் உடல்நிலை கவலைக்கிடம்.

சாய்பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா, புட்டபர்த்தி, ஸ்ரீசத்யசாய் பாபாவிற்கு(85) கடந்த மார்ச் 28ம் தேதி திடீரென நுரையீரல் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திகிராமில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது, வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்கும் சாய்பாபாவின் உடல்நிலை , கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாபாவின் முக்கிய உடல் உறுப்புகள் சிகிச்சை முறைகளை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கொள்கை ஜெயில்ல உள்ளது: விஜயகாந்த்.


அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளது என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளது அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். பணங்குடி கிராமத்தில் பிரச்சாரம் செய்து பேசிய விஜயகாந்த்,

இன்றைக்கு அண்ணா திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெயில்ல இருக்கிறார். ஆக அண்ணா திமுக கொள்கையே ஜெயில்ல இருக்கு. நான் தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்கேன் என நினைக்கிறேன் என்றார்.

விஜயகாந்த்தின் பேச்சுக்கள், செயல்பாடுகள் நாளுக்கு நாள் குழப்பமாகி வருகின்றன. தர்மபுரியில் தனது கட்சி வேட்பாளரையே போட்டு அடித்தார். தற்போது தவறுதலாக பேசி மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

திமுக கொள்கைகள் இன்று சிறையில் உள்ளன, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று கூறுவதற்குப் பதிலாக, அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று என்று கூறியதால் கூடியிருந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது என விஜயகாந்த் பேசியபோது, தேமுதிகவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த நிலையில் வேனுக்குள் இருந்த யாரோ, கீழே இருந்தபடி விஜயகாந்த்தை அழைத்து அவர் தவறாகப் பேசியதை சுட்டிக் காட்டினர்.

இதையடுத்து சற்று நேரம் பேச்சை நிறுத்திய விஜயகாந்த், நான் தப்புத் தப்பாக பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இதற்கு காரணம், இந்த சத்தம்தான் என்று கூறியபடி அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து நாக்கை துறுத்தியபடி கண்டித்தார். பின்னர் அவர் தொடர்ந்து பேசினார்.

தர்மபுரியில் சொந்த கட்சி வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு அடங்குவதற்குள், தன்னுடைய கட்சிக்குத்தான் பிரச்சாரம் செய்ய வந்துள்ளதாகவும், அதிமுக கொடிகளை கீழே இறக்குமாறும் அரியலூரில் விஜயகாந்த் பேசிய வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிமுக தொண்டர்களை கொதிப்படைய செய்தது.

இந்நிலையில் அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது என்று விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகி இருப்பது, அதிமுக தலைமையை கொதிப்படையச் செய்துள்ளது.

இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்தனர்.

கத்தாதீங்க நான் குழம்பிடுவேன் - விஜயகாந்த் ஆத்திரம்.

நாகர்கோவில், கத்தாதீங்க நான் குழம்பிடுவேன் என குமரி மாவட்டத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆத்திரமடைந்தார். தொடர்ந்து கூச்சல் போட்ட தொண்டரையும் அவர் கூட்டத்தில் இருந்து விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார். குலசேகரத்தில் இருந்து அவர் பிரசாரத்தை துவங்கினார்.

மனித நேயம், அன்பு அனைவருக்கும் அவசியம். பகவத் கீதை, பைபிள், குர் ஆன் ஆகிய மூன்றும் இதைத்தான் வலியுறுத்துகின்றன. வேட்பாளர் யார், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் அதுதான் முக்கியம்.

மக்கள், தொண்டர்கள் விரும்பியதால் அதி்முகவுடன் கூட்டணி வைத்தேன். எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என கூட்டணி வைத்துள்ளேன். அதிமுக கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தக்கலையில் கூச்சல், குழப்பம்!

தக்கலையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கூச்சல் போட்டனர். அப்போது ஆத்திரமடைந்த விஜயகாந்த் கத்தாதீங்க, நான் குழம்பிடுவேன். கொடியை இறக்கிக் காட்டுங்கள் என்றார்.

வடசேரி அண்ணா சிலை அருகே பேசுகையில், நான் பேசுவதை கேட்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்க போடுற சத்தத்தை கேட்க நான் வரவில்லை. சத்தம் போட்டீர்கள் என்றால் வேனில் இருந்து நான்கீழே இறங்கிடுவேன். நீங்க எல்லோரும் வேனுக்கு வந்து பேசுங்கள் என்றார்.

இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன் - பூனம் அறிவிப்பு.


உலகக் கோப்பையை வென்றெடுத்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன். எல்லோருக்கும் நான் நிர்வாணமாக முடியாது எனது பல்டி அடித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் பொதுமக்கள் நிர்வாணமாக காட்சி தரத் தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம். இந்த நிலையில் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், பூனம் எங்கே என்று கேட்டு பேஸ்புக்கிலும், ட்விட்டர் தளத்திலும் ஆயிரக்கணக்கானோர் ஆவலை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

ஆனால் பூனத்தின் தரப்பில் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மெளனத்தைக் கலைந்து வாய் திறந்துள்ளார் பூனம். இதுகுறித்து அவரது மேலாளர் விபின் கூறுகையில்,

பூனம் பாண்டேவின் அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச பத்திரிகைகள் பூனத்தை அணுகின. தங்களது அட்டைப் படத்திற்கு நிர்வாணமாக போஸ் தருமாறு அவை கேட்டுள்ளன. ஆனால் அதை பூனம் நிராகரித்து விட்டார். இந்தியா வென்றால் நிர்வாணமாவேன் என்று அவர் சொன்னதற்கு அர்த்தம், பொது இடத்தில் நிர்வாணமாவேன் என்று அர்த்தம் இல்லை. மாறாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக மட்டுமே நிர்வாணமாவேன் என்றுதான் அர்த்தம்.

எனவே பொது இடத்தில் பூனம் நி்ர்வாணமாக காட்சி தரும் திட்டம் இல்லை. எந்தப் பத்திரிகைக்கும் அவர் நி்ர்வாணமாக போஸ் தரவும் மாட்டார் என்றார்.

இதனால் பூனத்தின் தரிசனத்திற்காக காத்திருக்கும் ஜொள்ளு ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்கிடையே பூனத்திற்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து விபின் கூறுகையில், மாரல் போலீஸ் என்று கூறிக் கொள்ளும் சிலர் பூனத்தை தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். நிர்வாணமாக காட்சி தரக் கூடாது என்று அவர்கள் மிரட்டி வருகின்றனர் என்றார்

தேமுதிகவிற்கு பாட்டில் சின்னம் ஒதுக்க வேண்டும் - சுப்ரமணியம்சாமி


சுப்ரமணியம்சாமி பேட்டி ;

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தேர்தல் ஆணையம் பாட்டில் சின்னம் ஒதுக்க வேண்டும். முரசு சின்னம் தரக்கூடாது. என்று கோரிக்கை வைத்துள்ளாதாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

தர்மபுரியில் சொந்த கட்சி வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு அடங்குவதற்குள், தன்னுடைய கட்சிக்குத்தான் பிரச்சாரம் செய்ய வந்துள்ளதாகவும், அதிமுக கொடிகளை கீழே இறக்குமாறும் அரியலூரில் விஜயகாந்த் பேசிய வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிமுக தொண்டர்களை கொதிப்படைய செய்தது.

இந்நிலையில் அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது. என்று விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகி இருப்பது, அதிமுக தொண்டர்களைவிட, அதிமுக தலைமையை கொதிப்படையச் செய்துள்ளது.

விஜயகாந்த் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுஇடங்களில் அநாகரிகமாக நடந்து வருகிறார். அவர் வைத்திருக்கும் கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் பாட்டில் சின்னம் ஒதுக்க வேண்டும்.

குடிச்சிட்டு வற்றார். குடிக்காம அதுமாதிரி பேசமுடியாது. அப்படியே பிரச்சாரம் பண்றார். போற இடங்கள்ல வாய்க்கு வந்த மாதிரி பேசறார். வேட்பாளர அடிக்கிறார். பொது இடத்திலே அநாகரிகமா நடந்துக்கிறார், நிதானம் இல்லே. விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை. அவர் ஒரு ஜானி வாக்கர் என்றார்.

அதனால குடிகாரருக்கு பாட்டில் சின்னம்தான் லாயக்கி, அதான் பொருத்தம். முரசு சின்னம் தரக்கூடாது. இவ்வாறு சுப்ரமணியம்சாமி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்

அசல் உலகக் கோப்பை கஸ்டம்ஸ் பிடியில்-இந்திய வீரர்கள் கையில் நகல்!!

ஐசிசி உலகக் கோப்பை இன்னும் சுங்கத்துறையிடம்தான் உள்ளது என்றும், இந்திய வீரர்களிடம் கொடுக்கப்பட்டது நகல் கோப்பை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Mahendra Singh Dhoni poses  World Cup Trophy
Getty Images
வெளிநாட்டிலிருந்து எந்தப் பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும், அதன் உண்மையான மதிப்பில் 35 சதவீத தொகையை சுங்க வரியாக கட்ட வேண்டும். ஆனால் ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்தபோது வரி கட்டப்படவில்லை.

இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து மும்பை சுங்கத்துறையினர் கோப்பையைக் கைப்பற்றி விட்டனர். ஆனால் உலகக் கோப்பை தங்களிடம்தான் இருப்பதாக முன்பு ஐசிசி தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்திய வீரர்களிடம் இருப்பது நகல் கோப்பை என்றும், ஒரிஜினல் கோப்பை இன்னும் சுங்கத்துறை வசம்தான் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அது மேலும் விரிவாக தெரிவிக்கவில்லை. சுங்கத்துறையிடம் கேட்டதற்கு, வரி கட்டாததால் உலக்க கோப்பை தங்கள் வசமே இருப்பதாகவும், வரியைக் கட்டினால் மட்டுமே கோப்பையைத் திருப்பித் தருவோம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

கருத்து கணிப்பு ஜெயிக்காது; மக்கள் கருத்துதான் ஜெயிக்கும்! - வடிவேலு


"கருத்து கணிப்பு வெளியிடுவதால் எதிரணிக்கு தேர்தல் வெற்றி வந்துவிடப் போவது இல்லை; மக்கள் கருத்துதான் வெற்றியைத் தரும். அந்த வெற்றி திமுகவுக்குதான்'' என்று தூத்துக்குடி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேலு கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு நேற்று பிரசாரம் செய்தார். காலையில் திருச்செந்தூரில் பிரசாரம் தொடங்கினார். பல்வேறு ஊர்களில் ஆதரவு திரட்டிவிட்டு, பழையகாயல், முத்தையாபுரம் வழியாக பகல் 1 மணி அளவில், தூத்துக்குடி அண்ணாநகருக்கு வந்தார்.

அங்கு திரண்டிருந்த ஏராளமான தொண்டகள் மத்தியில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவனை ஆதரித்து பேசினார். அப்போது நடிகர் வடிவேலு கூறியதாவது:

அடிப்படை தேவைகள்

"எல்லோரும் என்னயப் பார்த்து சிரிக்கிறீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு நான் விளையாட்டு பொம்மையாக இருக்கேன். நீங்கள் தினமும் என்னை டி.வி.யில் பாக்குறீ்ங்க. ஆனா, உங்களை பார்க்கிற வாய்ப்பை எனக்கு நம்ம கலைஞர் கொடுத்து இருக்கிறார்.

எல்லா மக்களுக்கும் அடிப்படை தேவையான உணவு, உடை, வீடு அவசியம். இது எதுவும் கிடைக்காத மக்களுக்கு அடிப்படை தேவைகளை கலைஞர் செய்து கொடுத்து உள்ளார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் கலைஞர் திட்டங்களை பார்த்து என் மனம் குளிர்ந்து விட்டது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்திருக்கிறார். ஏழை மாணவ-மாணவிகள் படிக்க சமச்சீர் கல்வி, இலவச சீருடை என்று பல திட்டங்களை தந்து உள்ளார். 108 ஆம்புலன்சு திட்டம் மூலம் ஏராளமான உயிர்கள் பிழைத்து உள்ளன.

பல்... செல்...

பல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இப்போது செல் (செல்போன்) இல்லாமல் இருக்க முடியாது. செல்போன் இருப்பதால் அவசரம் கருதி, மக்கள் எளிதாக 108 ஆம்புலன்சை அழைத்து விடுகின்றனர். அந்த திட்டத்தால் உயிர் பிழைத்தவர்களின் வாழ்த்துக்களாலேயே கலைஞர் 108 வயதுக்கு மேல் வாழ்வார்.

வீட்டுக்கு பெரியவர் இல்லாமல் சிறப்பு இல்லை. அதே போன்று தமிழகத்துக்கு ஒரு பெரியவராக தலைவர் கலைஞர் உள்ளார். காமராஜர், பெரியார், அண்ணா இப்போது இல்லை. ஒரே தலைவராக கலைஞர் உள்ளார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று அங்கு உள்ள சிறந்த திட்டங்களை பார்வையிட்டு இங்கு வந்து செயல்படுத்துகிறார்.

எதிர் கூட்டணியில் குழப்பம்

எதிர் கூட்டணி குழம்பிப் போய் இருக்கிறது. அவர்களால் கலைஞர், நிழலைக் கூட நெருங்க முடியாது. முதல்வர் இருக்கை என்ன மியூசிக்கல் சேரா? தலைவர் என்பதற்கு தகுதி வேண்டும். தலைவர் என்று கூறிக் கொள்கிற ஒருவர் வேட்பாளரை அடிக்கிறார். அவர் ஜெயித்தால் மக்கள் அவரிடம் திட்டங்களை பெற முடியுமா?

கருத்து கணிப்பு வெளியிடுகிறார்கள். அதன்படிதான் நடக்கப் போகிறதா? மக்கள் கருத்துதான் வெற்றியை தேடித்தரும். தி.மு.க. கூட்டணிதான் ஜெயிக்க போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. தென்மாவட்டங்களின் தேர்தல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவர் மு.க.அழகிரி. ஸ்பிக் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுத்தார். அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

எல்லா மக்களிடமும் எழுச்சி உள்ளது. ஆகையால், வருகிற 13-ந் தேதி அன்று தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்...", என்றார் வடிவேலு.

வடிவேலு கூட்டத்தில் கல்வீச்சு

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வடிவேலு மீது சரமாரியாக

கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு திமுக வேட்பாளர்களை ஆதரித்து இரவில் வடிவேலு பேசிக்கொண்டி ருந்தார். அப்போது, விஜயகாந்த் ஹீரோ அல்ல; அவர் என்றுமே ஜீரோதான் என்று வடிவேலு கூறியபோது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. ஆனால் கல்வீச்சில் வடிவேலுவுக்கு காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

வடிவேலு விஜயகாந்த்தை காட்டுத்தனமாக விமர்சனம் செய்து வருகிற போதிலும், இதுவரை விஜயகாந்த், வடிவேலு குறித்து ஒரு வார்த்தை கூட பதிலுக்கு தரம் தாழ்ந்து விமர்சிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.