Saturday, May 7, 2011

அல்-காய்தா இயக்கம் பின்லேடன் மரணத்தை உறுதிபடுத்தியது .


ஒசாமா பின் லேடன் மரணத்தை அல்-காய்தா இயக்கம் உறுதிபடுத்தி ள்ளது.

இஸ்லாமிய இணையதள குழுக்களுக்கு அல்-காய்தா அனுப்பியுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சைட்" என்னும் இணையதள கண்காணிப்பு நிறுவனம் இத்தகவலை கண்டறிந்து மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

ஒசாமாவை கொன்றதற்காக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அதன் கூட்டு நாடுகளை பழிவாங்கப் போவதாகவும், ஆயுதப் போராட்டத்தில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அல்-காய்தா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"ஒசாமாவின் ரத்தம் அமெரிக்கர்களையும் அவர்களின் முகவர்களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு சாபமாக துரத்தும். அவர்களது மகிழ்ச்சி கவலையாக மாறும். ஒசாமாவுக்காக குரல் எழுப்ப முன்வருமாறு பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமியர்களை கேட்டுக் கொள்கிறோம். துரோகிகளாலும் திருடர்களாலும் உங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கவும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டை விலக்கவும் முன்வருமாறு கோருகிறோம்." என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் அமெரிக்காவின் நாடகமா ?


ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:

* அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலை அவசரம் அவசரமாக கடலில் வீசி எறியவேண்டிய காரணமென்ன?

* தாக்குதல் நடத்திய வீரர்கள் யார் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படாதது ஏன்?

* உலகின் மிகப்பெரும் தீவிரவாதி என்று கூறப்படும் ஒரு நபரைத் தாக்கும்போது, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிர் தாக்குதலில் ஒரு சிறு காயம்கூட ஏற்படாமல் போனது எப்படி?

* சோவியத் ரஷ்யாவையே எதிர்த்து போரிட்டு வெற்றி பெறக்கூடிய அளவிற்குப் படைப் பட்டாளத்தை கொண்டிருந்த ஒருவருக்கு, அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தும்போது பாதுகாவலுக்கு அவரின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களைத் தவிர வேறு ஆளில்லை என்பதையும் நம்ப முடியவில்லையே?

* பின்லேடன் கொலை செய்யப்பட்டபின் அது குறித்த ஆதாரங்கள் ஏதும் அமெரிக்க அரசின் சார்பில் வெளியிடப்படவில்லையே, ஏன்?

* பின்லேடன் முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளதுபோல் ஒரேயொரு புகைப்படம் வெளியிடப்பட்டது. அதுவும் போலியானது என அறியப்பட்ட உடனேயே, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி உட்பட பிரபல சர்வதேச ஊடகங்களிலிருந்து அவசரம் அவசரமாக அப்படம் நீக்கப்பட்டுள்ளது. இப்போது, "பின்லேடன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியிட முடியாது" என ஒபாமா அறிவித்துள்ளார். காரணம் என்ன?

* பின்லேடன் தங்கியிருந்த படுக்கையறையின் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்டில் பக்கத்தில் ரத்தம் உரைந்துள்ள காட்சியினை மட்டும் சுற்றிக் காண்பிக்கப்படுகிறது. அந்த அறையின் ஜன்னல்களிலோ சுவர்களிலோ தாக்குதல் நடந்ததற்கான குண்டுகள் பாய்ந்த எந்த ஒரு அடையாளத்தையும் காணமுடியவில்லை. வெளியிலிருந்து உள்ளேயிருப்பவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது, உள்ளேயிருப்பவர் குண்டு தாக்குதலுக்கு இரையானால், அவரின் இரத்தம் ஜன்னல் பக்கத்திலிருந்தே சிதற வேண்டும். ஆனால், அந்த வீடியோவில் கட்டிலின் பக்கத்தில் மட்டும் இரத்தம் உரைந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்?

* இரவில் தாக்குதல் நடத்தியது போன்று ஒரு வீடியோ அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் கட்டிடத்தின் பல பகுதிகளிலும் (குண்டுகள் வெடித்ததால் ஏற்படும்) நெருப்பு பிளம்புகள் பற்றி எரிவது போன்று காட்டப்படுகிறது. ஆனால் தாக்குதலுக்குப்பின் கட்டிடத்தின் எந்தப் பகுதியிலும் தாக்குதலாலோ தீயினாலோ ஏற்பட்ட சேதத்தைக் காண முடியவில்லையே? அது எப்படி?

* உலகில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தி வந்ததாக தொடர்ந்து கூறப்பட்டு வந்த அல்காயிதா இயக்கத்தலைவர் பின்லேடன், ஐந்து வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஒரு முக்கிய நகரில் ஒரே இடத்தில் குடும்பத்தினரோடு தங்கியிருந்திருக்க வாய்ப்பு உண்டா? ஒன்று அவர்மீது இதுவரை கூறப்பட்டு வந்த பயங்கரவாத தாக்குதல் செய்திகள் பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, இச்செய்தி பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது உண்மை?

* பின்லேடன் சுடப்படும்போது, நிராயுதபாணியாக இருந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. இன்னொரு செய்தியோ, ஒரு பெண்ணைக் கேடயமாக பின்லேடன் பயன் படுத்தியதால் அவரை உயிரோடு பிடிக்க முடியாமல், சுட நேர்ந்ததாகக் கூறுகிறது. நிராயுதபாணியாக, பாதுகாப்புக்கு எவரும் இல்லாமல் இருந்த ஒருவரை உயிரோடுப் பிடிக்க முடியாதா?

பின்லேடன் கொல்லப்பட்டதாக மிகுந்த உற்சாகத்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தப்பின்னர் வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்களிலிருந்தும் அமெரிக்க அதிபரின் முரண்பாடான அறிவிப்புகளிலிருந்தும் இத்தனை சந்தேகங்களும் எழுந்துள்ளன. பின்லேடன் விஷயத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க சிஐஏ செய்த சில தில்லுமுல்லுகளும் இதற்கு முன்னரே பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத் தக்கவை.

இன்று 2011, மே மாதம் பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரிமை கோரும் நிலையில், 2003லேயே பின்லேடன் இறந்து விட்டதாக அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பேனசிர் பூட்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்த செய்தியினை முதலில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

இரு நாட்டு அதிபர்களின் 8 ஆண்டுகள் இடைவெளியிலான இந்த இரு அறிவிப்புகளில் எந்த அறிவிப்பு உண்மை? எந்த அறிவிப்பு பொய்? இருவரில் யார் பொய்யர்?

பின்லேடனைக் கொலை செய்யும் விஷயத்தில் பொய்யுரைத்து உலக மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் பின்லேடன் கொல்லப்பட்டாரா? இல்லை, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு நல்ல உரமிட்டு வளர்த்துவிட்டதற்குப் பிரதிபலனாக, ஒரு பக்கம் கொல்லப்பட்டதாக மேட்டரை மூடிவிட்டு, மறுபக்கத்தில் பின்லேடன் சுதரந்திரமாக உலவ வழிவகை செய்யப்பட்டுள்ளதா?

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக இருந்த ஒருங்கிணைந்த கம்யூனிச சோவியத் ரஷ்யாவை வீழ்த்த, அரபுக் கோடீஸ்வரரும் விடுதலைத் தாகம் கொண்டிருந்தவருமான பின்லேடன், இதே அமெரிக்காவாலேயே ஆயுதமும் பணமும் வாரி இறைத்து வளர்க்கப்பட்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகில் தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அகந்தையில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அமெரிக்கா, தான் வளர்த்தெடுத்த பின்லேடனே தனக்கு எதிராகத் தலைவேதனையாக மாறுவார் என கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

அரபுலகின் எண்ணெயின் மீது ஏகாதிபத்தியத்தை நிறுவத் துவங்கிய அமெரிக்காவுக்கு, நேரடியாகவே பின்லேடன் மிரட்டல்கள் விடத் துவங்கினார்.

உலகம் முழுவதும் ஆங்காங்கே அமெரிக்கத் தூதரகங்கள் பின்லேடனின் அல்காயிதா இயக்கத்தினரால் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் 2001, செப்.11 இரட்டைக் கோபுர தகர்ப்பு நிகழ்வு நடந்தது.

சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த அமெரிக்கா, "தீவிரவாதத்துக்கு எதிரான போர்" என்ற அறைகூவலுடன் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தாலிபான் அரசுக்கு எதிராக போரைத் துவங்கியது - அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒருதலைபட்சமாக ஆப்கான்மீது அத்துமீறி போர் அறிவித்தார்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவமே அமெரிக்காவின் உள்நாட்டு தயாரிப்புதான் என்றொரு தர்க்கவாதம் LOOSE CHANGE என்ற டாக்குமெண்டரி மூலமாக இன்று உலகின் எண்ணவோட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம்.

இதற்கிடையில், 2003 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் பேனசீர் பூட்டோவால் பின்லேடன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்காவின் வாதத்துக்கு, ஒசாமாவி டமிருந்து அவ்வப்போது வந்ததாகக் கூறப்பட்ட மிரட்டல் வீடியோ டேப்புகள் வலு சேர்த்தன.

ஆனால், அந்த வீடியோக்கள் அமெரிக்க சிஐஏவால் தயாரிக்கப்பட்ட போலி வீடியோ டேப்புகள் என்று நுட்பரீதியாகவும் தர்க்கரீதியாகவும் நிரூபிக்கப்பட்டன.

அமெரிக்க அரசு வெளியிட்ட ஒசாமாவின் பொய் வீடியோக்களில் சில:

பின்லேடன் மிரட்டல் விடுவதாகவும் பின்லேடன் அறிக்கை என்ற பெயரிலும் வீடியோவே வெளியிட்டு உலகை முட்டாளாக்கிய அமெரிக்க சிஐஏவுக்கு, இல்லாத ஒருவரை இருப்பதாகவும் இருப்பவரை இறந்து விட்டவராகவும் ஒரு செட்டப் நாடகத்தை நடத்திக்காட்டுவதும் அதற்கு ஆதாரமாக எல் கே ஜி மாணவனுக்குரிய தகுதிகூட இல்லாத நபர்களை வைத்து, போட்டோஷாப் கைங்கர்யத்தில் போட்டோக்களைத் தயாரித்து உலாவிடுவதும் பின்னர் குட்டு உடைந்தால், உடனேயே அதனை அதிகாரம் பயன்படுத்தி நீக்க வைப்பதும் பெரிய காரியங்களா என்ன?

இதற்கு இந்திய காவல்துறையினரால் அவ்வபோது திறமையான செட்அப்களோடு நடத்தப்படும் போலி என்கவுண்டர் நாடகங்கள் எவ்வளவோ மேல் என கூறத்தோன்றுகிறது!

எது எப்படியோ, இன்றுவரை அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பை அல் காயிதா இயக்கம்தான் நடத்தியது என்பதற்கு ஆதாரமாக ஒரு ஆதாரம்கூட வெளியிடாத அமெரிக்காவின், கோபுர தகர்ப்பில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தின் கறுப்புப்பெட்டியினைக் கண்டெடுக்கக்கூட இயலாத அளவு அது அழிந்துவிட்ட நிலையில் அவ்விமானத்தை இயக்கிய விமானியின் எரியாமல் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்தான், இரட்டைக் கோபுர தகர்ப்பில் பின் லேடனின் தொடர்புக்கான ஆதாரம் என்றதை அப்படியே நம்பி இன்று உலகின் அனைத்து தரப்பினரும் உள்வாங்கிவிட்டதைப் போன்று, போலி போட்டோஷாப் புகைப்படத்தை நோக்கி இன்று கேள்விகள் எழுந்தாலும் நாளை இது மறக்கடிக்கப்பட்டு, பின்லேடனை ஒபாமாதான் கொன்றார் என்று வரலாற்றில் குறிக்கப்படும்!

அதுதான் அமெரிக்காவில் சரிந்து வரும் ஒபாமாவின் பிம்பத்தை அடுத்த தேர்தலில் தூக்கி நிறுத்துவதற்கான ஒபாமாவின் உடனடித் தேவை! அதற்கு ஆதரவாக உலகளாவிய சாட்சியங்களும் தேவை - மௌன சாட்சியங்கள்!

ஆனால், அபோதாபாத்வாசிகளின் கூற்று என்னவெனில்,

"இங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில்லை. எல்லாம் அமெரிக்கா நடத்தும் நாடகம்!"


வீடியோக்களுடன் காண :

http://www.inneram.com/2011050616257/doubts-about-bin-laden-murdervideos

பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்குதல.


பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்குதல், மற்றும் ஆளில்லா விமானம் மூலமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் வடக்கு வாசிரிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் இரண்டு முறை நடத்தியதில் 17 தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.

பின்லேடன் கொல்லப்பட்ட துயரத்தில் இருந்த தாலிபான்கள் இந்த தாக்குதலால் பெருங்கொந்தளிப்பிற்கு ஆளானார்கள்.

அமெரிக்காவின் மகிழ்ச்சி நீடிக்காது; அது விரைவில் சோகத்தை தழுவும்.

அமெரிக்காவையும், உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் அமெரிக்கர்களின் உயிர் களையும் சாபமாய் அல்கொய்தா துரத்தும். என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

மேலும் பின்லேடன் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டு, உறுதி செய்த அல்கொய்தா, விலைமதிப்பில்லாத பின்லேடன் இரத்தத்திற்கு, அமெரிக்கா பழிவாங்கப்பட்டு பலியாகும். என்று அறிவித்தனர்.

ஆளில்லா விமானம் மூலமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது.

இம்முறை பாகிஸ்தான் தலைநகரமான பாக்தாத் மீது ஆளில்லா விமானம் மூலமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது இதில் 21பேர் கொல்லப்பட்டனர்.

அதிர்ச்சியில் பாகிஸ்தான்.

பின்லேடன் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் பாகிஸ்தான் செய்வதறியாது உறைந்து போயிருந்தது. அமெரிக்காவின் அத்துமீறல் ஒருபுறம். இஸ்லாமியர்களின் குமுறல் மறுபுறம்.

இஸ்லாமிய முறைப்படி பின்லேடன் உடல் அடக்கம் நடைபெறவில்லை என்றும், இது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியருக்கு அமெரிக்கா செய்த துரோகம் என்று குற்றம்சாட்டி குமுறியது அல்கொய்தா.

இந்நிலையில் பாகிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப் படஉள்ளது.

இந் நிகழ்வுகளால் பின்லேடன் இருந்த இடம், வாழ்ந்த இடம், இறந்த இடம், உடல் புதைக்கப் பட்ட இடம், என்று எதுவும் அவன் நினைவாக இருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பது தெளிவாகிறது.


Friday, May 6, 2011

கனிமொழிக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ ஆட்சேபம் - விசாரணை நாளை ஒத்திவைப்பு.


கனிமொழிக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ ஆட்சேபம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம் தெரிவித்தார்.

முன்னதாக கனிமொழியும், சரத்குமாரும் இன்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவரும் சிபிஐ தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

கனிமொழி சார்பாக ராம் ஜேத்மலானி நீதிமன்றத்தில் ஆஜரானார். சரத்குமார் சார்பாக வழக்கறிஞர் அல்தாப் அகமது வாதாடினார்.

இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம் தெரிவித்தார்.

தனது முன்ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ அதன் வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என கனிமொழி சார்பாக நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் மதிய உணவு சாப்பிட்ட கனிமொழி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்பி கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமாரும் தில்லி பாட்டியாலா வளாகத்தில் உள்ள 113-வது சேம்பரில் மதிய உணவு அருந்தினர்.

கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தொடர்பான விசாரணை பிற்பகலுக்குப் பின்னரும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கனிமொழி முன்ஜாமீன் மனு : நாளையும் விசாரணை தொடரும்.

கனிமொழி சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியும், சரத்குமார் சார்பாக அல்தாப் அகமதுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பான விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நாளை 10 மணிக்கு மீண்டும் இந்த மனுக்களின் மீது விசாரணை நடைபெறும்.

விசாரணை ஒத்திவைப்பு:

வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டதால் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார் கனிமொழி

விசாரணையின்போது கனிமொழி பதற்றம் இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டார். அவரது கணவர் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் பேசியவாறு புன்னகைத்தபடி இருந்தார்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது உடல்நலக்குறைவு காரணமாக திமுக எம்பி ஆதிசங்கர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். மற்ற அனைவரும் பதற்றமின்றியே காணப்பட்டனர்.

அரசு அதிகாரி மீது வழக்கு : அண்ணா ஹஸாரே முடிவு.


ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பிய புணே நகர அறக்கொடைத்துறை உதவி ஆணையர் மீது மான நஷ்ட வழக்கு தொடர அண்ணா ஹஸாரே முடிவு செய்திருக்கிறார். ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளைக்கு அவர்தான் தலைவர்.

"தணிக்கை செய்யப்பட்ட முழுமையான கணக்குகளைத் தாக்கல் செய்யாத உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என்று கேட்டு அறக்கொடை ஆணையர் அலுவலகத்தின் உதவி ஆணையர் ஹிந்த் ஸ்வராஜ், அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இந்த நோட்டீûஸப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்றால் தணிக்கை அறிக்கையை அவர்கள் உரிய காலத்தில் அனுப்பிவிட்டனர்.

நோட்டீஸ் வந்ததை அறிந்த அண்ணா ஹஸாரே அறக்கட்டளையின் பிற நிர்வாகிகளை அழைத்து "கணக்கைத் தாக்கல் செய்தீர்களா இல்லையா?' என்று கேட்டார்.உடனே அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை நகலையும் ஒப்புகைச் சான்றிதழையும் காட்டினர்.

ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை 2008-09 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாகவும் அதே சமயம் நிரந்தர வைப்பு நிதியில் ரூ.50 லட்சத்தை வைத்திருந்ததாகவும், ரூ.23.49 லட்சம் மதிப்பில் சொத்துகள் இருந்ததகாவும் அவற்றை ஆணையருக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டு விட்டதாகவும் மற்றொரு அறக்கட்டளை அளித்த புகாரை ஆராயாமல் உதவி ஆணையர் இந்த நோட்டீûஸ அனுப்பிவிட்டார். இது ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளையே இப்படியா என்று பலரை வியப்புற வைத்தது. அதன் பிறகு உண்மை அறிந்து அந்த அதிகாரி மன்னிப்பு கோரினார்.

ஆனாலும் உண்மை மற்றவர்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி நகரில் நிருபர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார் ஹஸாரே.

நீதிமன்ற உத்தரவை மதித்து நடப்பேன் : கனிமொழி பேட்டி.


தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களிடம் பேசுகிறார் கனிமொழி.

புது தில்லி, தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு கனிமொழி அளித்த பேட்டி :

கேள்வி: சி.பி.ஐ. நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

கனி: நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவையும் நான் மதித்து நடப்பேன். நிரபராதி என்பதை நிருபித்து வெளியே வருவேன். நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் யூகித்துக் கூற முடியாது. நமது நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நான் இந்த விவகாரத்தில் இருந்து மீண்டு வருவேன் என நம்புகிறேன்.

கேள்வி: நீங்கள் பெண் என்பதால் உங்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

கனி: நான் எப்போதும் ஆணும், பெண்ணும் சமம் என கருதுபவள். எனவே பெண் என்பதற்காக எந்தச் சலுகையையும் காட்டக்கூடாது எனக் கருதுகிறேன்.கேள்வி: நீதிமன்ற விசாரணையின்போது கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?கனி: இதுவரை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை.

கேள்வி: இந்த விவகாரத்தில் உங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லை எனக் கருதுகிறீர்களா?

கனி: அப்படி இல்லை. நாங்கள் எந்த அரசியல் கட்சியின் ஆதரவையும் கோரவில்லை. நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வாழ்க்கை நாங்கள் சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்.

கேள்வி: தில்லியில் உங்களுக்கு ஆதரவாக யார் யார் இருக்கிறார்கள்? இந்த விவகாரம் காரணமாக உங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா?

கனி: எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. என்னுடன் எனது தாயார், சகோதரர் மற்றும் நண்பர்கள் உள்ளனர்.

கேள்வி: இந்த விவகாரத்தை கட்சிக்குப் பின்னடைவாகக் கருதுகிறீர்களா?

கனி: இதுபோன்ற ஏராளமான சோதனைகளை திமுக சந்தித்துள்ளது. சோதனைகளைச் சந்தித்து மீண்டு வந்திருக்கிறோம்.

கேள்வி: நீதிமன்ற முடிவு என்னவாக இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?

கனி: யூகத்தின் அடிப்படையில் கருத்து கூற நான் ஊடகம் கிடையாது.

கேள்வி: குற்றப்பத்திரிகை விவகாரத்தால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதா?

கனி: இந்த விவகாரம் தொடர்பாக கட்சி மட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரை இதில் எந்தப் பிரிவினையையும் நான் பார்க்கவில்லை.

கேள்வி: நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை எத்தனை மணிக்கு ஆஜராகப் போகிறீர்கள்?

கனி: காலை 10 மணிக்கு ஆஜராக உள்ளேன்.

கேள்வி: இந்த விவகாரத்தில் திமுக மட்டும் குறி வைத்து தாக்கப்படு வதாகக் கருதுகிறீர்களா?

கனி: மூத்த பத்திரிக்கையாளர்களான உங்களுக்கே தெரியும்.

இந்த வழக்கில் கனிமொழியின் சார்பாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர்களான ராம் ஜேட்மலானி, அல்டாஃப் அகமது ஆகியோர் ஆஜராக இருப்பதாக கனிமொழிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகும் சமயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி தில்லி வருவார் எனக் கூறப்பட்டது. செம்மொழி விருது வழங்கும் விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதை ஒட்டி அவர் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராவதால் தில்லிக்கு வருவதை முதல்வர் கருணாநிதி தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அழகிரி யோசனை கூறியதாகத் தெரியவருகிறது.

ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவு : தமிழக அரசு விளக்கம்.

வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகள் இணையதளம் மூலம் மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

15.09.10 முதல் வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகள் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலக உயிர்ப்பதிவேட்டின் விபரங்கள் இணையதளத்தில் ஏற்றம் செய்யப்பட்டது. பின்னர் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள சுமார் 70 இலட்சம் மனுதாரர்களின் பதிவு விவரங்கள் இணைய தளத்தில் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமல், மனுதாரர்கள் வசிக்கும் இடத்திலேயே இணையதளம் மூலமாக மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் நீண்டதூரம் பயணம் செய்து சென்னையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை தவிர்க்கப் பட்டுள்ளது. மேலும் தற்போது மதுரையில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் துவக்கப்பட்டுள்ளதால் 15 தென் மாவட்ட முதுகலைப் பட்டதாரி மனுதாரர்கள் சென்னைக்கு வராமல் மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்திலேயே தங்களது பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் மற்றும் இதரப்பணிகளை செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்துறையில் வேலைவாய்ப்பு அலுவலக, பதிவுப்பணிகள் இணையதளம் மூலமாக கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் ஆரம்ப காலத்தில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் அவை உடனுக்குடன் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமாக சரிசெய்யப்பட்டு வருகிறது. எனினும் இத்திட்டம் முழுமையாகவும், சிறப்பாகவும், மனுதாரர்கள் பயனடையும் வகையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

பொதுவாக வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தேவைக்கேற்ப இதர வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டு, அலுவலகப் பணிகள் தொய்வின்றி நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.