Thursday, April 28, 2011

போலீஸ் பயிற்சி பள்ளியில் 11 பெண் போலீசாரை கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர் வீடியோ படம் எடுத்து மிரட்டினார்.

போலீஸ் பயிற்சி பள்ளியில்    11 பெண் போலீசாரை    கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர்    வீடியோ படம் எடுத்து மிரட்டினார்

மராட்டிய மாநிலம் கொல்காபூரில் போலீஸ் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு புதிதாக தேர்வு பெற்ற 70 பெண் போலீசார் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அனைவருமே திருமணம் ஆகாதவர்கள். அவர்களுக்கு பயிற்சி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதனால் அனைத்து பெண் போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் 11 பெண் போலீசார் கர்ப்பமாக இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது அவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் காம்ளி வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக கூறினார்கள். யுவராஜ்காம்ளியின் வீடு போலீஸ் பயிற்சி பள்ளி அருகே உள்ளது. தினமும் பெண் போலீசாரை வர வழைத்து அவர்களிடம் உறவு வைத்துள்ளார். ஆசைக்கு இணங்குபவர்களை மட்டுமே பயிற்சியில் வெற்றி பெற்றதாக அறிவிப்பேன் என மிரட்டி அனைவரையும் அவர் கற்பழித்து வந்துள்ளார்.

மேலும் அவர்களோடு உல்லாசமாக இருந்ததை வீடியோ படமும் எடுத்துள்ளார். இங்கு நடந்ததை வெளியே சொன்னால் வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். கர்ப்பமான போலீசார் மட்டும் அல்லாமல் மேலும் ஏராளமான பெண் போலீசாரையும் அவர் கற்பழித்து இருப்பதாக தெரிகிறது.

இதையடுத்து யுவராஜ் காம்ளியை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் இதுபற்றி கூறும் போது நான் பெண் போலீஸ் யாரையும் கற்பழிக்க வில்லை. எனது உயர் அதிகாரிகள் தான் கற்பழித்து கர்ப்பமாக்கிவிட்டு என் மீது பழி போட்டு விட்டனர் என்று கூறினார்.

இந்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுபற்றி விசாரணை நடத்த உள்துறை மந்திரி ஆர்.ஆர். பட்டீல் உத்தரவிட்டு உள்ளார். எதிர்கட்சியினர் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

மும்பை - உலகின் கடைசி டைப் ரைட்டர் தொழிற்சாலை மூடப்பட்டது.

மும்பையில் செயல்பட்டு வந்த உலகின் கடைசி டைப் ரைட்டர்    தொழிற்சாலை மூடப்பட்டது;    கம்ப்யூட்டர் பயன்பாட்டால் விற்பனை இல்லை

கடந்த காலங்களில் அலுவலக பணிகளில் டைப் ரைட்டர் முக்கிய பங்கு வகித்தது. இப்போது அந்த இடத்தை கம்ப்யூட்டர்கள் பிடித்து விட்டன. இதனால் டைப்ரைட்டர் தேவை குறைந்து போனது. உலகில் பல நாடுகளில் டைப்ரைட்டர் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வந்தன.

ரைப்டைட்டரை வாங்க ஆள் இல்லாமல் போனதால் அந்த தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டன. கடைசியாக உலகிலேயே மும்பையில் மட்டும் ஒரே ஒரு டைப்ரைட்டர் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. கோத்ரேஜ் மற்றும் போய்சி நிறுவனம் மூலம் இந்த தொழிற்சாலை நடத்தப்பட்டு வந்தது. டைப் ரைட்டர் விற்பனை ஆகாததால் இப்போது தொழிற் சாலையை மூடி விட்டனர். கடைசியாக 500 டைப் ரைட்டரை மட்டும் உற்பத்தி செய்து விட்டு மூடி விட்டார்கள். இந்த தொழிற்சாலை 1900-ம் ஆண்டு செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சமாதியின் மேல் பகுதியில் சாய்பாபாவுக்கு தங்கச் சிலை ; தரிசனத்திற்கு அலைமோதிய கூட்டம்.

சமாதியின் மேல் பகுதியில்   சாய்பாபாவுக்கு   தங்க சிலை;   சமாதி தரிசனத்திற்கு    அலைமோதிய கூட்டம்

உலக மக்களின் உள்ளம் கவர்ந்த சாய்பாபாவின் உடல் அடக்கம் இன்று புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது. பண் டிதர்கள் வேதங்கள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு இருந்த அனைவரும் “பாபா” என்ற படி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சாய்பாபா உடலை அடக்கம் செய்வதை பெண்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக சுற்றிலும் பெரிய திரை போட்டு மூடி இருந்தனர். அடக்கத்திற்கு பிறகு திரை விலக்கப்பட்டது. சாய்பாபா அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் தங்கசிலை வைக்க வேண்டும் என்று ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஏற்று அவரது சமாதியின் மேல் பகுதியில் சாய்பாபாவின் தங்க சிலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு நிதி தர ஏராளமான தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளனர். சாய்பாபா உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு சமாதி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் விடிய விடிய வரிசையில் காத்திருந்தனர். அவர்களும் இன்று சமாதி தரிசனம் செய்தனர். இதற்காக பக்தர்கள் 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது.

சில இடங்களில் பக்தர்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்ற அதிரடி படையினர் லேசான தடியடி நடத்தி பக்தர்கள் வரிசையாக செல்ல வழிவகை செய்தனர். பக்தர்கள் 2 நாட்கள் சாய் பாபா சமாதியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

முன்கூட்டியே சவப்பெட்டி: சாய்பாபா சாவில் மர்மம்.

முன்கூட்டியே சவப்பெட்டி:  சாய்பாபா சாவில் மர்மம்

கடந்த 24 ம் தேதி சாய்பாபா மரணம் அடைந்தார்.ஆனால் அவரது உடல் வைக்க பயன்படுத்திய குளிர் சாதன பெட்டி ஏப்ரல் 5-ல் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 20 நாட்கள் முன்னதாக வாங்கப்பட்டது.

இந்த சவப் பெட்டி குமார் அன் கோ நிறுவனம் வழங்கியுள்ளது. ராஜு என்பவர் ரூ 1,07,000 கொடுத்து வாங்கியதும் தெரியவந்துள்ளது.

அசன்அலி பாஸ்போர்ட் விவகாரம் : கவர்னர் பதவி விலக கோரி புதுவையில் முழு அடைப்பு .

அசன்அலிக்கு பாஸ்போர்ட் விவகாரம்:    கவர்னர் பதவி விலக கோரி    புதுவையில்    முழு அடைப்பு;   தனியார் பஸ்கள் ஓடவில்லை; கடைகள் அடைப்பு

குதிரைப்பண்ணை அதிபர் அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க புதுவை கவர்னர் இக்பால்சிங் சிபாரிசு செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கவர்னர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் புதுவை கவர்னர் இக்பால்சிங் மீது மேலும் 2 புதிய புகார்கள் எழுந்தது.

மகன்களை உறுப்பினராக கொண்ட சவுத் எஜூகேசனல் டிரஸ்ட்டுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்று கொடுத்தார் என்றும், புதுவையில் சொற்ப எண்ணிக்கையில் வசிக்கும் சீக்கிய மதத்தினருக்கு குருத் வாரா கட்ட அரசு நிலம் ஒதுக்கினார் என்றும் புகார் கூறப்பட்டது.

இது எதிர்க்கட்சிகளின் குரலை மேலும் வலுவடைய செய்தது. கவர்னரை பதவி விலக வலியுறுத்தி பாரதிய ஜனதா, மார்க்சிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு (பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. இதனால் அதிகாலையில் இருந்தே தனியார் பஸ்கள் ஓடவில்லை.

தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடியது. புதுவை எல்லையில் இருந்து தமிழக அரசு பஸ்கள் பஸ் நிலையம் வரை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டன. பின்னர், மீண்டும் எல்லை வரை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. பந்த் போராட்டத்தையொட்டி புதுவையில் பெரும் பாலான டெம்போக்களும், ஆட்டோக்களும் ஓட வில்லை. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

கோடை விடுமுறை என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிந்தது. ஒரு சில தனியார் கல்லூரிகள் மட்டும் இயங்கின. கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியுற்றனர். நகரம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சின்ன மார்க்கெட், பெரிய மார்க்கெட், உழவர் சந்தை ஆகியவை இயங்க வில்லை. பஸ் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : அமலாக்கப் பிரிவு.

2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு  தொலைபேசி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் :அமலாக்கப் பிரிவு


அமலாக்கப் பிரிவு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணையின் போது கூறிய செய்தியில் 2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், 2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின், 2ஜி ஊழலில் பெற்ற நாலாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் அமலாக்கப் பிரிவு 2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் பெயரை வெளிபடுத்தாமல் தகவல் அடங்கிய முத்திரை இடப்பட்ட உறையை வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளிடம் அளித்தது.

ஸ்பெகட்ரம் வழக்கு சட்டப்படி சந்திப்போம் : கனிமொழி எம்.பி. பேட்டி.

ஸ்பெகட்ரம் வழக்கு சட்டப்படி சந்திப்போம்; கனிமொழி எம்.பி. பேட்டி

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த கனிமொழி எம்.பி.யை நிருபர்கள் பேட்டி கண்டனர்.

அப்போது ஒரு நிருபர் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான குற்றப் பத்திரிக்கையில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதே? இது குறித்து என்ன கருத்து சொல்கிறீர்கள் என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கனிமொழி, வழக்கு கோர்ட்டில் உள்ளது, அதை சட்டப்படி சந்திப்போம் என்று கூறினார்.