Tuesday, April 5, 2011

ராகுல்காந்தி - உடனிருந்து கொல்லும் பகை?


தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்ச போக்கால் தமக்கு எதிராக சக்தி வாய்ந்த ஒரு சதி வலை பின்னப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி உணர்ந்துள்ளார்.

எதிர்க் கட்சியை ஆளும் கட்சியாக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

அழகிரியின் அத்தனை அசைவுகளுக்கும் அணைகட்டுகிறது தேர்தல் ஆணையம்.

கிட்டதட்ட தேர்தல் ஆணையத்தின் முன். திமுகவும், அழகிரியும் நிராயுத பாணிகளாக நிற்க காரணம் யார்? இதன் பின்னனி என்ன என்பது புரியாத சூழலில் கருணாநிதியால் உணரப்பட்டதுதான் மினி எமர்ஜென்சி.

காங்கிரஸ் மேலிடம் நினைத்தால் தேர்தல் ஆணையத்தினை கட்டுப்படுத்தலாம். ஆனால் அவர்களின் நோக்கத்திலேயே நடைபெறுவதாக உணர்ந்த கருணாநிதி உஷாரானார்.

மேலும், ராசா கைது, கலைஞர் தொலைகாட்சி ரெய்டு, தயாளு, கனிமொழி விசாரணை இதையெல்லாம் குறைந்தபட்சம் தேர்தல் முடியும்வரை சி.பி.ஜ.யை தாமதப்படுத்த காங்கிரஸால் முடியும். ஆனால் அவர்களோ தங்களுக்குத் தொடர்பு இல்லை என்பது மாதிரி நடந்து கொண்டார்கள். தேர்தல் ஆணைய நடவடிக்கைகளிளும் அதே நடிப்பு தொடர கருணாநிதி கொந்தளித்துப்போனார்.

ஈரோடில் தொடங்கி, சேலம், வேலூர் இப்படி தொடர்ச்சியாக கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் உன்னிப்பாக கருணாநிதியின் பேச்சை கவனிக்க வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது தமிழகத்தில் மீண்டும் ஒரு எமர்ஜென்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆகும். என்று மேடை தோறும் பேசிவருகிறார்.

நெருக்கடி காலத்தில் திமுகவிற்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை, என் மூலம் கேட்டறிந்து கொண்ட, முந்தைய எமர்ஜென்சியை கொண்டு வந்த பிரதமர் இந்திராகாந்தி சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் மன்னிப்பு கேட்ட நிகழ்வினையும் மேடைதோறும் கூறி வருகிறார்.

என்னுடைய அதிகாரிகள் ஆங்காங்கு நடத்திய அக்கிரமங்களுக்கு எல்லாம், அடக்கு முறைகளுக்கு எல்லாம், மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன். என்று அன்று இந்திராகாந்தி சொன்னதைக் கருணாநிதி இப்போது நினைவூட்டுவது, அவருடைய சந்தேகத்தை பிரதிபலிக்கிறது. இந்திராவைப்போல் இப்போதைய நிகழ்விற்கு யார் என்பது கேள்விக்குறி.

கருணாநிதி அதையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறார். நான் தமிழகத்திலே இருக்கிற அதிகாரிகளைக் கேட்கிறேன். உங்களுக்கு இந்த உத்தரவை இட்டது யார்? நாடாளுகின்ற தகுதி படைத்தவரா? இல்லை நாட்டை ஆண்டுகொண்டு இருக்கின்ற பிரதமரா? இல்லை...யார்?

இவர்களுக்கு உத்திரவிட்டது யார் என்று எனக்குத் தெரியும்! என்று பிரதமரை மீறிய, தேர்தல் ஆணையத்தை மீறிய ஓரு சக்தியை நோக்கியே இதைப் பேசியிருக்கிறார்.

ராகுல்காந்தியும், அவரைச் சுற்றியுள்ள அறிவுஜீவிகளாகக் கருதிக்கொள்ளும் பார்ப்பன மற்றும் மலையாள அதிகாரிகளே காரணம் என்று கருதப்படுகிறது.

இதே போல் ராஜீவ்காந்தியுடனும் இருந்த பார்ப்பன மற்றும் மலையாள அதிகாரிகளே, தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சதிவலை பின்னிய பின்னனி நாடறியும்.

திமுகவிற்கு பிரச்சனை என்றால் அதில் காங்கிரஸூம் தானே பாதிக்கும்.

காங்கிரஸ் கட்சி 63 இடங்களை திமுகவிடம் இருந்து வாங்கியது தவிர அவர்கள் வெற்றி பெறுவோம் என்று எண்ணவில்லை. பல தொகுதிகளில் தேர்தல் வேலை தொடங்காத நிலையே உள்ளது.

அவர்களுக்கு வெற்றி குறிக்கோள் இல்லை என்பது மாதிரி தோன்றுகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க. தோற்றால் போதும், அடுத்த தேர்தலில் வேறொரு வியூகம் அமைத்து அ.தி.மு.க. வீழ்த்துவது காங்கிரஸின் திட்டமாக இருக்கிறது.

இப்போது திமுகவின் தலையில் வெண்ணெயை வைத்து அது உருகி கண்ணை மறைக்கும் போது அமுக்குவதுதான் காங்கிரஸின் திட்டம். என்கிறார்கள்.

தோற்பதற்காகவே சீட்டு ஆடிய சூனியக்காரி மாதிரி, தொடர்ந்து சீட்டு ஆட்டத்தில் தோற்று, அதன் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வைத்து....அதே சமயம் வெளியில் மிகப்பெரிய காரியத்தை போட்டியின்றி முடித்தாளாம் ஒரு சூனியக்காரி. நாட்டில் நடப்பதைப் பார்த்தால் அவ்வாறே எண்ணத் தோன்றுகிறது.

இதன் எதிரொலியாக வேலூர் கூட்டத்தில், மகாபலி சக்கரவர்த்தியின் கதையையும் சொல்லி இருக்கிறார் கருணாநிதி அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்ட மன்னனை வீழ்த்த யார், என்ன திட்டம் போட்டார்கள், என்று அவர் விளக்க., மூன்றடி மண் கேட்டு மாற்று உருவில் வந்தவர்களிடம் அந்த மன்னன் எப்படி சிக்கி பலியானான் என்று போகிறது கதை. உடனிருந்து கொல்லும் பகையை முழுமையாக வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மனது புழுங்கி உள்ளார் கருணாநிதி.

வடிவேலுவிற்கு எதிர்ப்பு - அடுத்தடுத்த கல்வீச்சு, உருவபொம்மை எரிப்பு.


வடிவேலு பிரச்சாரக் கூட்டத்தில் கல்வீச்சு.

நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். வடிவேலுவின் இந்த விமர்சனத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 3-4-2011 ஞாயிறன்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து இரவில் வடிவேலு பேசிக்கொண்டிருந்தார்.

‘விஜயகாந்த் ஹீரோ அல்ல; அவர் என்றுமே ஜீரோதான். என்று வடிவேலு பேசியபோது கூட்டத்தில் கல்வீச்சு நடந்தது.

இந்த கல்வீச்சில் வடிவேலுவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

வடிவேலு கூட்டத்தில் நடந்த இந்த கல்வீச்சு சம்பவத்தால் அப்பகுதில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது.


நடிகர் வடிவேலு உருவபொம்மை எரிப்பு .

3-4-2011 ஞாயிறன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகர் வடிவேலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்செங்கோடு - மௌசி பகுதியில் தேமுதிக தொண்டர்கள் ஆவேசத்துடன் வடிவேலுவின் உருவபொம்மை எரித்தனர்.


நடிகர் வடிவேலு பிரச்சாரக் கூட்டத்தில் மீண்டும் கல்வீச்சு .

நடிகர் வடிவேலு தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பேசிய போது அவரது பிரசார வாகனத்தின் மீது கல்வீசினார்கள்.

இதே போன்று நேற்று 4-4-2011 திங்களன்று அவர் மதுரை மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது அலங்காநல்லூரிலும் அவர் வேன் மீது கல்வீசப்பட்டது.

நேற்று மாலை வாடிப்பட்டியில் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அலங்காநல்லூருக்கு வந்து கொண்டிருந்தார். ஊருக்குள் நுழையும் இடத்தில் யாரோ மர்ம கும்பல் அவரது வேன் மீது சரமாரியாக கற்களை வீசியது. இதில் வேனின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. ஆனால் வேனில் பயணம் செய்த வடிவேலு உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே வேனில் நின்றபடி, பா.ம.க. வேட்பாளர் இளஞ்செழியனுக்கு ஆதரவு திரட்டி அவர் பேசும்போது,

நான் ஊருக்குள் வரும்போது, யாரோ மர்ம நபர்கள் இருட்டுக்குள் இருந்து என் வேன் மீது கற்களை வீசிவிட்டு தப்பிவிட்டனர்.

தைரியம் இருந்தால் கற்களை வீசியவர்கள் வெளிச்சத்தில் வந்து மோதிக்கொள்ள தயாரா? தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்கள் முதலமைச்சர் கருணாநிதியை மீண்டும் 6-வது முறையாக முதலமைச்சராக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் அனைவரும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போடவேண்டும் என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து ஊமச்சிகுளம் பகுதியில் அவர் பிரசாரம் செய்தார்.

இதனிடையே நடிகர் வடிவேலு வேன் மீது கல்வீசப்பட்ட தகவல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ராகார்க்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

ஆ.ராசா விவகாரம் - நீரா ராடியா, ரத்தன் டாடா,அனில் அம்பானி. சொன்னவை

ஆ.ராசா விவகாரத்தில் எனக்குத் தொடர்பில்லை : நீரா ராடியா.


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விவகாரத்தில் எனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்று நீரா ராடியா பொதுக்கணக்குக் குழுவிடம் (பிஏசி) தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோரிடம் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

மழுப்பினார் ராடியா

விசாரணையின் போது, பெரும்பாலும் எனக்குத் தெரியாது, எனக்கு மறந்து விட்டது என்று ராடியா மழுப்பலாக பதிலளித்ததாக அதன் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். நீரா ராடியாவுடன் அவரது வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இரு மூத்த அதிகாரிகளும் விசாரணைக்கு வந்திருந்தனர்.

அரசியல் தலைவர்கள், தொழில் துறை பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் நீரா ராடியா நடத்திய தொலைபேசி உரையாடல்கள் குறித்த கேள்விக்கு, அவற்றில் சில பதிவுகள் உண்மையானவைதான், மேலும் சில போலியானவை என்று அவர் குறிப்பிட்டார்

.மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவைப் புகழ்ந்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ரத்தன் டாடா எழுதிய கடிதம் குறித்தும் நீரா ராடியாவிடம் பொதுக் கணக்குக் குழு விசாரணையின் போது கேள்வி எழுப்பப்பட்டது என்று மற்றொரு பிஏசி உறுப்பினர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக நீரா ராடியா பேசியுள்ளது, ஆ.ராசாவுக்கு மீண்டும் தொலைத்தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவது குறித்துப் பேசியது ஆகியவற்றைப் பற்றி ராடியாவிடம் பிஏசி தலைவர் முரளி மனோகர் ஜோஷி விளக்கம் கேட்டார்.

சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக நாடாளுமன்றத்துக்கு அவர் சுமார் 11 மணியளவில் வந்தார். எனினும் ராடியாவிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் சுமார் 1 மணி நேரம் வரை விவாதித்தனர். அதன் பின்னரே ராடியா விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

உண்மைகளை மறைக்க முயல்கிறார் ராடியா

பல உண்மைகளை மறைக்கவே நீரா ராடியா முயல்கிறார் என்று நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ராடியாவிடம் விசாரித்தபின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: உண்மைகளைக் கூற வேண்டுமென்ற எண்ணத்தில் இல்லாமல், மழுப்ப வேண்டுமென்ற நோக்கத்திலேயே ராடியாவின் பதில்கள் இருந்தன. "இந்த உரையாடல்களைக் கேட்டதில்லை, எனக்கு சரியாக நினைவில்லை, எனக்குத் தெரியவில்லை' என்றுதான் அவரது பெரும்பாலான பதில்கள் இருந்தன.

எனினும் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களுடன்தான் பேசியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார். எனினும் விசாரணையின் போது நிகழ்ந்த அனைத்தையும் இப்போது கூற முடியாது என்றார் ஜோஷி.

ரத்தன் டாடாவிடம் விசாரணை நடத்தியபோது, தெளிவாகவும், நேரடியான பதில்களையும் அளித்தார். பதிவு செய்யப்பட்ட டேப்பில் இருப்பது தனது குரல்தான் என்பதையும் ஒப்புக் கொண்டார். எனினும் சில விஷயங்களை அவர் தெளிவாகக் கூற முடியவில்லை. இன்னும் ஓரிருநாளில் குழுவை மீண்டும் அணுகுவதாகவும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார் என்று ஜோஷி மேலும் தெரிவித்தார்.

அடுத்தது டாடா

தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்குப் பின் தொழிலதிபர் ரத்தன் டாடா, பிஏசி முன் ஆஜரானார்.ஏற்கெனவே சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் செல்போன் சேவையில் முன்னிலையில் இருக்கும் நிலையில் டாடா நிறுவனம், ஜிஎஸ்எம் முறையிலும் செல்போன் சேவையைத் தொடங்க வேண்டியதன் காரணம் என்ன?பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்து தனக்கு (டாடா) சாதகமாக செய்திகளை வெளியிட்டது தொடர்பாக டாடாவிடம் பிஏசி விசாரணையின் போது கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.




தயாநிதி மாறனுடன் நட்புறவு இல்லை:

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுடன் நட்புறவு இருந்ததில்லை என்று டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா கூறியிருக்கிறார்.

அமைச்சரவை அமைப்பதில் தாம் எந்த விதத்திலும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன்பு திங்கள்கிழமை ஆஜராகி ரத்தன் டாடா விளக்கமளித்தபோது இதைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதம் குறித்து டாடாவிடம் பிஏசி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒரு மத்திய அமைச்சரைப் பாராட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதுவற்குப் பதில் முதல்வருக்கு கடிதம் எழுதியது ஏன்? அப்படி எழுதிய கடிதம் அம்பலமானது எப்படி என்றும் பிஏசி உறுப்பினர்கள் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த ரத்தன் டாடா, இந்தக் கடிதம் அம்பலமானதால் தமக்கு எந்தப் பலனுமில்லை என்று தெரிவித்தார். கடிதம் பற்றி முதலில் குறிப்பிட்டது பார்தி டெலிகாமின் சுனில் மிட்டல்தான் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். எனினும் கடிதம் வெளியானதற்கு யார் காரணம் என்பதை அவர் கூறவில்லை என்று பிஏசி வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்பானியிடம் இன்று விசாரணை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானி, எடிசலாட் டிபி டெலிகாம் தலைமை நிர்வாகி அடுல் டாம், எஸ்டெல் தலைமை நிர்வாகி ஷாமிஸ் தாஸ், யூனிடெக் வயர்லெஸ் மேலாண்மை இயக்குநர் சிக்வி பிரிக்கே உள்ளிட்டவர்களிடம் பொதுக்கணக்குக்குழு செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரணை நடத்தவுள்ளது.

Monday, April 4, 2011

சாய்பாபாவின் உடல்நிலை கவலைக்கிடம்.

சாய்பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா, புட்டபர்த்தி, ஸ்ரீசத்யசாய் பாபாவிற்கு(85) கடந்த மார்ச் 28ம் தேதி திடீரென நுரையீரல் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திகிராமில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது, வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்கும் சாய்பாபாவின் உடல்நிலை , கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாபாவின் முக்கிய உடல் உறுப்புகள் சிகிச்சை முறைகளை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கொள்கை ஜெயில்ல உள்ளது: விஜயகாந்த்.


அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளது என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளது அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். பணங்குடி கிராமத்தில் பிரச்சாரம் செய்து பேசிய விஜயகாந்த்,

இன்றைக்கு அண்ணா திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெயில்ல இருக்கிறார். ஆக அண்ணா திமுக கொள்கையே ஜெயில்ல இருக்கு. நான் தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்கேன் என நினைக்கிறேன் என்றார்.

விஜயகாந்த்தின் பேச்சுக்கள், செயல்பாடுகள் நாளுக்கு நாள் குழப்பமாகி வருகின்றன. தர்மபுரியில் தனது கட்சி வேட்பாளரையே போட்டு அடித்தார். தற்போது தவறுதலாக பேசி மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

திமுக கொள்கைகள் இன்று சிறையில் உள்ளன, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று கூறுவதற்குப் பதிலாக, அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று என்று கூறியதால் கூடியிருந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது என விஜயகாந்த் பேசியபோது, தேமுதிகவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த நிலையில் வேனுக்குள் இருந்த யாரோ, கீழே இருந்தபடி விஜயகாந்த்தை அழைத்து அவர் தவறாகப் பேசியதை சுட்டிக் காட்டினர்.

இதையடுத்து சற்று நேரம் பேச்சை நிறுத்திய விஜயகாந்த், நான் தப்புத் தப்பாக பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இதற்கு காரணம், இந்த சத்தம்தான் என்று கூறியபடி அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து நாக்கை துறுத்தியபடி கண்டித்தார். பின்னர் அவர் தொடர்ந்து பேசினார்.

தர்மபுரியில் சொந்த கட்சி வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு அடங்குவதற்குள், தன்னுடைய கட்சிக்குத்தான் பிரச்சாரம் செய்ய வந்துள்ளதாகவும், அதிமுக கொடிகளை கீழே இறக்குமாறும் அரியலூரில் விஜயகாந்த் பேசிய வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிமுக தொண்டர்களை கொதிப்படைய செய்தது.

இந்நிலையில் அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது என்று விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகி இருப்பது, அதிமுக தலைமையை கொதிப்படையச் செய்துள்ளது.

இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்தனர்.

கத்தாதீங்க நான் குழம்பிடுவேன் - விஜயகாந்த் ஆத்திரம்.

நாகர்கோவில், கத்தாதீங்க நான் குழம்பிடுவேன் என குமரி மாவட்டத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆத்திரமடைந்தார். தொடர்ந்து கூச்சல் போட்ட தொண்டரையும் அவர் கூட்டத்தில் இருந்து விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார். குலசேகரத்தில் இருந்து அவர் பிரசாரத்தை துவங்கினார்.

மனித நேயம், அன்பு அனைவருக்கும் அவசியம். பகவத் கீதை, பைபிள், குர் ஆன் ஆகிய மூன்றும் இதைத்தான் வலியுறுத்துகின்றன. வேட்பாளர் யார், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் அதுதான் முக்கியம்.

மக்கள், தொண்டர்கள் விரும்பியதால் அதி்முகவுடன் கூட்டணி வைத்தேன். எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என கூட்டணி வைத்துள்ளேன். அதிமுக கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தக்கலையில் கூச்சல், குழப்பம்!

தக்கலையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கூச்சல் போட்டனர். அப்போது ஆத்திரமடைந்த விஜயகாந்த் கத்தாதீங்க, நான் குழம்பிடுவேன். கொடியை இறக்கிக் காட்டுங்கள் என்றார்.

வடசேரி அண்ணா சிலை அருகே பேசுகையில், நான் பேசுவதை கேட்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்க போடுற சத்தத்தை கேட்க நான் வரவில்லை. சத்தம் போட்டீர்கள் என்றால் வேனில் இருந்து நான்கீழே இறங்கிடுவேன். நீங்க எல்லோரும் வேனுக்கு வந்து பேசுங்கள் என்றார்.

இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன் - பூனம் அறிவிப்பு.


உலகக் கோப்பையை வென்றெடுத்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன். எல்லோருக்கும் நான் நிர்வாணமாக முடியாது எனது பல்டி அடித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் பொதுமக்கள் நிர்வாணமாக காட்சி தரத் தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம். இந்த நிலையில் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், பூனம் எங்கே என்று கேட்டு பேஸ்புக்கிலும், ட்விட்டர் தளத்திலும் ஆயிரக்கணக்கானோர் ஆவலை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

ஆனால் பூனத்தின் தரப்பில் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மெளனத்தைக் கலைந்து வாய் திறந்துள்ளார் பூனம். இதுகுறித்து அவரது மேலாளர் விபின் கூறுகையில்,

பூனம் பாண்டேவின் அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச பத்திரிகைகள் பூனத்தை அணுகின. தங்களது அட்டைப் படத்திற்கு நிர்வாணமாக போஸ் தருமாறு அவை கேட்டுள்ளன. ஆனால் அதை பூனம் நிராகரித்து விட்டார். இந்தியா வென்றால் நிர்வாணமாவேன் என்று அவர் சொன்னதற்கு அர்த்தம், பொது இடத்தில் நிர்வாணமாவேன் என்று அர்த்தம் இல்லை. மாறாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக மட்டுமே நிர்வாணமாவேன் என்றுதான் அர்த்தம்.

எனவே பொது இடத்தில் பூனம் நி்ர்வாணமாக காட்சி தரும் திட்டம் இல்லை. எந்தப் பத்திரிகைக்கும் அவர் நி்ர்வாணமாக போஸ் தரவும் மாட்டார் என்றார்.

இதனால் பூனத்தின் தரிசனத்திற்காக காத்திருக்கும் ஜொள்ளு ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்கிடையே பூனத்திற்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து விபின் கூறுகையில், மாரல் போலீஸ் என்று கூறிக் கொள்ளும் சிலர் பூனத்தை தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். நிர்வாணமாக காட்சி தரக் கூடாது என்று அவர்கள் மிரட்டி வருகின்றனர் என்றார்